சென்னை : இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகி ஹிட்டடித்த படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க அவரை காதலிக்கும் நாயகிகளாக நயன்தாரா மற்றும் சமந்தா நடித்திருந்தனர்.
இதில் சமந்தா கதீஜா என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து நயன்தாராவை நடிப்பில் முந்தினார். அதிகமான கவர்ச்சியையும் காட்டி ரசிகர்களை வசீகரித்தார்.
கதீஜா கேரக்டரில் நடிக்க மறுத்த த்ரிஷா : விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டவர்கள் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியான படம் காத்து வாக்குல ரெண்டு காதல். விக்னேஷ் சிவன் மற்றும் லலித்குமார் இணைந்து தயாரித்திருந்த இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். அவரது இசையில் படத்தின் பாடல்கள் நான் பிழை மனதை வருடிய நிலையில், டூ டூ ஆட்டம் போட வைத்தது. படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே இந்தப் பாடல்கள் யூடியூபில் ட்ரெண்டிங்கில் இருந்தன.
இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியிருந்தது. படத்தில் கவனிக்கத்தக்க அம்சமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், சமந்தாவின் காதலராக நடித்திருந்தார். படத்தில் விஜய் சேதுபதியை நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் காதலிப்பதாக கதைக்களம் அமைந்திருந்தது. சிறுவயதிலிருந்தே அன்பிற்காக ஏங்கும் விஜய் சேதுபதிக்கு ஒரே நேரத்தில் இருவரிடமிருந்து கிடைக்கும் அன்பு எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதாக படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது.
இந்தப் படத்தில் நயன்தாராவை ஓரம்கட்டிவிட்டு நடிப்பிலும் கவர்ச்சியிலும் அதிகமாக ஸ்கோர் செய்திருந்தார் சமந்தா. படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த கதீஜா கேரக்டருக்கு பொருத்தமாக காணப்பட்டார். டைட்டில் போடும்போது கூட நயன்தாராவிற்கு கிடைத்த கைத்தட்டல்களைவிட சமந்தாவிற்கு அதிகமான கைத்தட்டகள் கிடைத்தன. அதற்கேற்றாற்போல, ஒட்டி கன்னத்துடன் படத்தில் நயன்தாரா தளர்வாக காணப்பட்டார்.
படத்தில் இரண்டு நாயகிகள் என்றபோதிலும் இருவருக்கும் சமமான வாய்ப்புகளை கொடுத்து ரசிகர்களுக்கு சிறப்பான ட்ரீட்டை கொடுத்திருந்தார் விக்னேஷ் சிவன், இவரது படங்களில் எப்போதும் காணப்படும், நகைச்சுவையும் படத்தில் சிறப்பாக இருந்தது. மொத்தத்தில் ரசிகர்களை அனைத்து அம்சங்களிலும் சிறப்பாக என்டர்டெயின் செய்த இந்தப் படம் வசூலிலும் விக்னேஷ் சிவனுக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.
இதனிடையே இந்தப் படத்தில் கதீஜா கேரக்டரில் நடிக்க முன்னதாக த்ரிஷாவைத்தான் விக்னேஷ் சிவன் அணுகினாராம். படத்தில் நடிக்க முதலில் ஓகே சொன்ன த்ரிஷா, ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தில் நடிக்க மறுப்புத் தெரிவித்தார். பின்னர்தான் சமந்தாவிடம் கதையை சொல்லியிருக்கிறார் விக்னேஷ் சிவன். படத்தில் நடிக்க முதலில் தயங்கினாலும் முழுக் கதையையும் கேட்டுவிட்டு சமந்தா ஓகே சொன்னாராம். நமக்கும் கதீஜா என்ற சிறப்பான கேரக்டர் கிடைத்தது.