திமுக – மதிமுக இணைகிறதா… திருப்பூர் துரைசாமி 2 வருஷமா எங்கே போனார்? வைகோ பளீச் பதில்!

எம்.ஜி.ஆருக்கு பின்னர் திமுகவில் இருந்து பிரிந்த மற்றொரு தலைவர் வைகோ. 90களில் யாழ்ப்பாணத்திற்கு ரகசிய பயணம்,

உயிருக்கு ஆபத்து என அடுத்தடுத்து வைகோ மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு, உளவுத்துறை தான் திமுகவில் குழப்பம் ஏற்படுத்துகிறது என்ற புகாரை வைகோ சொன்னார். இந்த சூழலில் திமுகவில் ஒரு பிரிவினர் வைகோவிற்கு ஆதரவாக நின்றனர். அடுத்தடுத்து விஷயம் விஸ்வரூபம் எடுக்க 1993ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் வைகோ.

மதிமுக உதயம்

இந்நிலையில் திமுகவில் இருந்து பிரிந்து வந்த மாவட்ட செயலாளர்கள் ஆதரவுடன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார் வைகோ. இந்த கட்சி முதல்முறை பிளவுபடப் போகிறதோ என்ற சலசலப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் கட்சியின் மூத்த நிர்வாகி திருப்பூர் துரைசாமி. இவர் கட்சியின் அவைத் தலைவராக இருப்பவர். துரைசாமி முன்வைக்கும் குற்றச்சாட்டு என்பது வாரிசு அரசியல். வைகோவின் மகன் துரை வைகோ கட்சிக்குள் முன்னிறுத்தப்பட்டதை துரைசாமி விரும்பவில்லை.

திருப்பூர் துரைசாமி பகீர்

மதிமுகவின் தற்போதைய நிலையை பார்த்து தமிழக மக்கள் எள்ளி நகையாடுகின்றனர். 30 ஆண்டுகளாக எழுச்சிமிக்க வைகோவின் உரையை கேட்டு வளர்ந்த தோழர்கள் தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த நிலை மேலும் மோசமடையாமல் இருக்க தாய் கழகமான

உடன் மதிமுகவை இணைப்பதே சரி எனக் குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக வைகோவிற்கு 4 முறை கடிதம் எழுதினார். மறுபுறம் துரைசாமிக்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. மூத்த நிர்வாகி என்ற மரியாதையால் துரைசாமி மீது நடவடிக்கை இல்லை என்று துரை வைகோ பதிலடி கொடுத்திருந்தார்.

மே தினக் கொண்டாட்டம்

இவ்வாறு விவகாரம் சூடுபிடித்து வரும் நிலையில் இன்று (மே 1) தொழிலாளர்கள் தினத்தை ஒட்டி மதிமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அதில், கட்சிக்குள் குழப்பம் நிலவுவதாக சிலர் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தார்கள். ஆனால் அவர்களின் முயற்சி தோற்று போய்விட்டது. பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னர் முன்பை விட வேகமாக மதிமுக செயல்படும் என்றார். திருப்பூர் துரைசாமி கட்சியில் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்விக்கு, அதற்கு அவரை தான் கேட்க வேண்டும்.

வைகோ விளக்கம்

இரண்டு ஆண்டுகளாக கட்சியின் எந்த ஒரு நிகழ்விலும் கலந்து கொள்ளாதவர், தற்போது வந்து அறிக்கை கொடுக்கிறார் என்றால் அது நல்ல நோக்கத்திலா இருக்கும்? கட்சியை இணைக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் மதிமுகவில் 99.9 சதவீத பேருக்கு அப்படிப்பட்ட எண்ணம் எதுவும் இல்லை. 30 ஆண்டுகள் நாம் போராடி வந்துவிட்டோம். எத்தனையோ கஷ்டங்களை கடந்து வந்திருக்கிறோம்.

மதிமுக உட்கட்சி தேர்தல்

இன்னும் கடந்து போவதற்கும் தயாராக இருக்கின்றோம். இதையும் கடந்து செல்வோம் என்று கூறினார். துரைசாமி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு, நாங்கள் சிலவற்றை அலட்சியப்படுத்த விரும்புகிறோம். ஒதுக்குகிறோம். ஜனநாயக முறைப்படி கட்சிக்குள் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதற்கு மேல் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து நான் பேச விரும்பவில்லை என்று வைகோ தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.