“ரஜினி இப்போ ஜீரோ; அரசியல்ல இல்லனா அரசியல் பேசக்கூடாது" – ஆந்திர அமைச்சர் ரோஜா காட்டம்

திரைத்துறையிலிருந்து அரசியலுக்குள் நுழைந்து இன்று ஆந்திராவில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் ரோஜா, ரஜினியை ஜீரோ என்றும், அரசியலில் இல்லையென்றால், அரசியல் பேசக்கூடாது என்றும் காட்டமாகப் பேசியிருக்கிறார்.

முன்னதாக ஆந்திராவில் மறைந்த முன்னணி நடிகரும், முன்னாள் முதலமைச்சருமான என்.டி.ஆரின் 100-வது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ரஜினி, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக நிறையப் பேசியிருந்தார்.

ரஜினி – சந்திரபாபு நாயுடு

இது ஆந்திர அரசியலில் பேசுபொருளாகவே, ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா, ரஜினி பேசியது சிரிப்பாக இருக்கிறது என்றும், அவருக்கு ஆந்திர அரசியல் தெரியாது என்றும் பதில்வினையாற்றியிருந்தார். இந்த நிலையில், புதுச்சேரி திருக்காஞ்சியில் நடைபெற்று வரும் புஷ்கரணி விழாவில் கங்கா ஆரத்தியில் கலந்துகொள்ள வந்திருந்த அமைச்சர் ரோஜா மீண்டும் ரஜினியைப் பற்றி காட்டமாகப் பேசியிருக்கிறார்.

செய்தியாளர்களிடம் ரஜினியின் பேச்சு குறித்து பேசிய அமைச்சர் ரோஜா, “ரஜினி சார் அரசியல் வேண்டாம்ன்னு நினைக்கும்போது அரசியல் பேசக்கூடாது. கிருஷ்ணர் என்றால் என்.டி.ஆர். அப்படித் தான் நாங்க பார்த்திருக்கிறோம். அவரை எப்படி கொன்னாங்க, அவரோட கட்சியைச் சந்திரபாபு நாயுடு எப்படி எடுத்துக்கிட்டாங்க என்பதெல்லாம் ரஜினி சாருக்கு நல்லாவே தெரியும். ரஜினி சார் தெரியாம தப்பா பேசிருக்காருன்னு நினைச்சேன், ஆனா தெரிஞ்சு தப்பா பேசிருக்காரு. அதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு.

ஆந்திர அமைச்சர் ரோஜா

தெலுங்கு ஆளுங்க எல்லாருமே ரஜினி சார சூப்பர் ஸ்டாரா விரும்புறாங்க. ஆனா இன்னைக்கு அவர் பேசினதைப் பார்த்து தெலுங்கு ஆளுங்க, என்.டி.ஆர் அபிமானி எல்லாருமே கோபத்தோட இருக்காங்க. ஏன்னா என்.டி.ஆரை கொலை பண்றதுக்கு யார் திட்டம் போட்டாரோ, அவரை நல்லவர்னு சொன்னது மட்டும் இல்லாம, மேல இருந்து என்.டி.ஆர் ஆசிர்வாதம் பண்ணுவார் என்று சொன்னது ரொம்ப தப்பு. அரசியல்ல இல்லாதப்போ இது மாதிரி பேசி… இருக்கிற பெயரும் போயிடுச்சு.

ஆந்திரா பாலிடிக்ஸ் எப்படி இருக்கும், என்ன நடக்கும் எதுவும் தெரியாம சந்திரபாபு நாயுடு வீட்டுக்கு கூப்பிட்டாங்க, சாப்பாடு போட்டாங்க, ஒரு ஸ்கிரிப்ட் கொடுத்தாங்க அதை படிச்சிட்டு சொல்றது சரியில்ல. ரஜினி சார்னா டாப்ல, அதுக்கு மேல-னு ஒரு ஐடியாவில் இருப்போம். ஆனா இன்னைக்கு ஜீரோ ஆயிட்டார். இந்த மாதிரி பேசி அவர் ஜீரோ ஆகுறது ரொம்ப கஷ்டமா இருக்கு. இனிமேலாவது எந்த ஒரு ஆர்ட்டிஸ்ட் ஒரு ஸ்டேட்டுக்கு போகும்போது, அந்த ஸ்டேட் பத்தி தெரிஞ்சா பேசணும் தெரியலன்னா சைலன்ட்டா… தான் உண்டு தன் வேலை உண்டுன்னு வந்தா நல்லா இருக்கும்.

ரஜினி

மன்னிப்பு கேட்க சொல்லி யாரும் கேட்க மாட்டோம். அவர் பாலிடிக்ஸ்ல இருந்தா, மன்னிப்பு கேட்கணும். அவர் எலெக்சன்ல நிக்கப் போறதில்ல. இனிமே ஆந்திராவுக்கு நிறைய தடவை வரப் போறது இல்ல. அவர் தெரிஞ்சு பண்ணாரோ இல்ல, தெரியாம பண்ணாரோ ஆனா பேசிட்டாரு. இவ்வளவு நாள் வந்த பேர் எல்லாம் போயிட்டு இருக்கு. அதுக்கு ஏதாவது ஒரு அறிக்கை கொடுத்தா நல்லா இருக்கும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.