சென்னை : வனிதா விஜயகுமாரின் 3வது கணவர் பீட்டர் பால் வீட்டில் இருந்து கட்டுக்கட்டான பணம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிராபிக்ஸ் டிசைனரான பீட்டர் பாலை நடிகை வனிதா விஜயகுமார் காதலித்து கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
பல பிரச்சனைகளுக்கு இடையே இவர்களது திருமணம் நடைபெற்ற போதும், இவர்களின் திருமண வாழ்க்கை ஒரு வருடம் கூட நீடிக்காமல் இருவரும் பிரிந்தனர்.
வனிதா விஜயகுமார் : பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை வனிதா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார். இதையடுத்து சொந்தமாக யூடியூப் சேனலைத் தொடங்கினார். அப்போதுதான் சிறந்த விஷூவல் டிசைனரான பீட்டர் பாலுடன் நட்பு ஏற்பட்டு, அது காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
பேசுபொருளான திருமணம் : திருமணத்திற்கு பின் இளம் தம்பதிகள் போல இருவரும் நெருக்கமாக இருந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை எடுத்து குவித்தனர். பீட்டர் பால், முதல் மனைவி எலிசபெத்தை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்து ஊடகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. யார் என்ன கேள்வி கேட்டாலும், தனி ஆளாக கெத்தாக பதில் அளித்து அனைவரையும் சமாளித்து வந்தார் வனிதா.
இருவரும் பிரிந்தனர் : இதையடுத்து, குடும்பத்தோடு கோவாவுக்கு போன போது பீட்டர் பாலுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதை அடுத்து, அவரை மருத்துவமனையில் அனுமதித்து கவனித்தார். ஆனால், உடல்நிலை சரியில்லாமல் போன போதும், பீட்டர் பால் குடிப்பழக்கத்தை நிறுத்தாததால்,அவர்களுக்குள் சில மாதங்களிலேயே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர்.
பீட்டர் பால் இறந்தார் : இதையடுத்து வெள்ளிக்கிழமை பீட்டர் பால் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து வனிதா விஜயகுமார், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் நீயே உனக்கு உதவினால்தான் கடவுளும் உனக்கு உதவுவார் என்று தனது அம்மா அடிக்கடி தன்னிடம் சொல்வார் என்றும், முக்கியமான முடிவெடுக்கும் நேரத்தில் எல்லாரும் அவரவர் பாதையை தேர்ந்தெடுப்பதாகவும் அவர் பதிவிட்டு இருந்தார்.
கட்டுக்கட்டாக பணம் : இந்நிலையில், பீட்டர் பால் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணத்தை உறவினர் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பீட்டர் பாலுக்கு குடிப்பழக்கம் இருந்தாலும் அவர் திறமையாக வேலை செய்யக்கூடியவர் என்பதால், அவர் சம்பாதித்த பணத்தை தனது முதல் மனைவி மற்றும் மகனுக்காக சேர்த்து வைத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வனிதாவை விட்டு பிரிந்த பீட்டர் பால், முதல் மனைவியின் வீட்டிற்கு செல்லாமல் தனியாகத்தான் வாழ்ந்து வந்துள்ளார்.