பிரித்தானிய இளவரசர் வில்லியம் மன்னர் முடிசூட்டு விழாவில், தனது தந்தை குறித்த மற்றும் சில விடயங்கள் குறித்து இதயத்தைத் தூண்டும் உரையை வழங்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முடிசூட்டு விழா
வெஸ்ட்மின்ஸ்டர் குருமடாலயத்தில் 6ஆம் திகதி சார்லஸ் மன்னர் முடிசூட்டு விழா நிகழ்வுகள் நடைபெற உள்ளன. முடிசூட்டு நிகழ்வில் சார்லஸ் மற்றும் கமிலாவுக்கு இதயம் நிறைந்த மற்றும் அன்பான பாராட்டு உரையை வழங்க இளவரசர் வில்லியம் தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது.
மாற்றாந்தாயான கமிலா குறித்து அவர் ஆற்றவுள்ள உரை மிகவும் மனதைத் தொடும் தருணமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Image: CHRIS JACKSON/GETTY
வில்லியமின் உரை
இதுபோன்ற விடயங்களில் வில்லியம் தனது சகோதரரிடம் முற்றிலும் மாறுபட்டதாக உணர்வதாக ஒரு அரசு வட்டாரம் கூறியுள்ளது. வில்லியமின் உரையானது, ‘கடமையிலும், தான் நம்பும் காரணங்களுக்காகவும் தன்னை அர்ப்பணித்த கொள்கையுடைய தந்தை சார்லஸை பாராட்டும் வகையில் அவரது பேச்சு இதயப்பூர்வமாகவும், அன்பாகவும் இருக்கும்.
கமிலா எவ்வாறு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார், மேலும் தனது அரசப் பாத்திரத்தில் பலருக்கு எவ்வாறு உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார், தனது தந்தையின் மகிழ்ச்சிக்கு எந்த வகையில் அவர் பங்களித்தார் என்பதற்கும் அவரை பாராட்டுவது மிக முக்கியம் என இளவரசர் வில்லியம் உணர்கிறார்’ என குறித்த அரச வட்டாரம் கூறியுள்ளது.
Image: Yui Mok/WPA Pool/Getty Images