LEO டைட்டில் வெளியீட்டு விழா ஆனந்த கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம், ‘லியோ’. இந்தப் படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.
ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
இந்தப் படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைத்ராபாத்தில் நடைபெற உள்ளதாகவும் இதற்காக பிரத்யேக செட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
Losliya: குந்தவை த்ரிஷாவுக்கு டஃப் கொடுக்கும் பிக்பாஸ் லாஸ்லியா… அசத்தல் போட்டோஸ்!
அதுமட்டுமின்றி படத்தில் இணைந்துள்ள பிரபலங்கள் குறித்தும் நாளதோறும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது. அதன்படி கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் நடித்த பல பிரபலங்கள் லியோ படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் லியோ படம் எல்சியூ வாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சமீபத்தில் இந்தப் படத்தில் வில்லன் நடிகர் பாபு ஆண்டனி இணைந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் லியோ படத்தில் மலையாள நடிகர் ஜாஃபர் சாதிக் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கிய பாவா கதைகளில் லவ் பண்ண உற்றனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜாபர் சாதிக். கடைசியாக ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்தார்.
Vanitha Vijayakumar: ‘நந்தினி’ ஐஸ்வர்யா ராயிக்கு ஓவர் மேக்கப்… அப்பட்டமா தெரியுது… வனிதா விமர்சனம்!
தற்போது லோகேஷ் கனகர்ஜின் ‘லியோ’ படத்தில் ஜாபர் சாதிக் இணைந்துள்ளார். கமல்ஹாசன் லீட் ரோலில் நடித்த ‘விக்ரம்’ படத்தில் நடித்திருந்தார் ஜாஃபர். தற்போது லியோ படத்திலும் ஜாஃபர் இணைந்திருப்பது, விக்ரம் மற்றும் லியோ படங்களுக்கு இடையே தொடர்பு இருக்கும் என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. இதனால் ரசிகர்கள் ஹேப்பியாகியுள்ளனர்.
‘லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. தற்போது படத்தின் இரண்டாவது ஷெட்யூல் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்தது, இயக்குனர்கள் மிஷ்கின் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று தங்களின் போர்ஷனை நிறைவு செய்துள்ளனர். விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Ponniyin Selvan 2: 3 நாட்களில் பொன்னியின் செல்வன் 2 வசூல்… ஆனா அதைவிட 100 கோடி ரூபாய் கம்மியாம்!