தர்மபுரி மாவட்டம் பி கொல்லம் பட்டியில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தின் போது ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கேள்வி கேட்ட பொதுமக்களை மிரட்டும் தொனியில் பேசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லம்பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்றத்தின் சார்பாக கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்தப் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் குடிநீர் பிரச்சனை சார்பாக ஊராட்சி மன்ற தலைவியிடம் முறையிட்டனர்.
மேலும் குடிநீர் பிரச்சினை காரணமாக ஊராட்சி மன்ற தலைவியை கேள்விகளால் துளைத்தெடுத்தனர். இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் பொதுமக்களை மிரட்டும் தோணியில் பேசினார்.
இதனால் கிராம சபை கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கூட்டத்திற்கு வந்திருந்த 100க்கும் மேற்பட்டோர் கலைந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.