இன்று சர்வதேச தொழிலாளர் தினம்

சர்வதேச தொழிலாளர் தினம் இன்றாகும். தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த நாளாக, இன்று உலகளாவிய ரீதியில் மே தினம் கொண்டாடப்படுகின்றது.

உழைக்கும் வர்க்கத்தை நினைவு கூறும் தினமாகவும், அவர்களை கௌரவப்படுத்தும் தினமாகவும் கொண்டாடப்படும் உலக தொழிலாளர் தினமானது, 18ஆம் நூற்றாண்டின் காலப்பகுதியில் 12 முதல் 18 மணி நேர கட்டாய தொழில் நிர்ப்பந்தத்திற்கும், தொழிலாளர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் அநீதிகளுக்கு எதிராகவும் ஏற்பட்ட புரட்சியே மே தினம் உருவாக காரணமாக அமைந்தது.

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 முதல் 18 மணி நேரம்வரை வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இதற்கு எதிரான குரல்கள் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் தொடங்கின.

1886 ஆம் ஆண்டு மே முதலாம் திகதியில் 88,000 தொழிலாளர்களின் பங்கேற்புடன் ‘எட்டு மணித்தியாலம்’ போராட்டம் ஆரம்பமானது. 307 நிறுவனங்களின் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் குதித்திருந்தனர். அடக்குமுறை அதிகரித்தது. எனினும் போராட்டம் தொடர்ந்தது. புரட்சி வெடித்து இறுதியில் தொழிலாளர்களின் கோரிக்கை வெற்றிகண்டது. இதனை நினைவு கூறும் விதமாகவே வருடா வருடம் மே தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

அத்துடன், இலங்கையில், 1934 ஆம் ஆண்டு, முதல் முறையாக சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பின்னர் 1956 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி இந்நாட்டில், சர்வதேச தொழிலாளர் தினம், அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.