சென்னை: Ajith (அஜித்) நடிகர் அஜித்குமார் தயாரிப்பாளர் கேயாரை கடுமையாக திட்டிய சம்பவம் தெரியவந்திருக்கிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் நம்ம ஏகேயா இப்படி பேசியிருக்கது என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
அஜித்குமார் கடைசியாக ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்தார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உலகம் முழுவதும் வசூல் செய்தது. போட்டியாக களமிறங்கிய வாரிசு படத்தைவிட துணிவு படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்ததால் அஜித் உற்சாகத்தின் உச்சத்தில் இருப்பதாகவும், அடுத்தடுத்த படங்களில் தீவிர கவனம் செலுத்துவதாகவும் கூறப்படுகிறது.
ஏகே 62: ஒரு படத்தை முடித்துவிட்டு தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிடும் வழக்கம் உடைய அஜித்குமார் தனது 62ஆவது படத்தின் அறிவிப்பை துணிவில் நடிக்கும்போதே முடிவு செய்துவிட்டார். அதன் படி, லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் அந்தப் படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் சொன்ன கதையில் இரண்டாம் பாதி லைகா நிறுவனத்துக்கு பிடிக்காததால் அந்தப் படத்திலிருந்து வெளியேறினார் விக்னேஷ் சிவன்.
மகிழ் திருமேனியின் விடா முயற்சி: விக்னேஷ் சிவன் வெளியேறியதை அடுத்து அஜித் 62ஆவது படத்தை இயக்க மகிழ் திருமேனி கமிட்டாகியிருக்கிறார். கதையை தயார் செய்யும் பணியில் மும்முரமாக இறங்கியிருந்த அவர் தற்போது கதையை இறுதி செய்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் படத்துக்கு விடா முயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு அறிவிப்பு வெளியானது.
ரேஸர் அஜித்: அஜித் இப்போது நடிப்பில் கவனம் செலுத்திவந்தாலும் ஆரம்பத்தில் கார் ரேஸா இல்லை நடிப்பா என்பதை போட்டு குழப்பிக்கொண்டவர். சில ரேஸ்களிலும் கலந்துகொண்டு வெற்றி பெறவும் செய்திருக்கிறார். இது ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க கவனம் சினிமாவிலிருந்து விலகியது. இதன் காரணமாக தொடர்ந்து தோல்வி படங்களையே கொடுத்தார். அதுமட்டுமின்றி விபத்துகளிலும் சிக்கினார்.
அட்வைஸ் செய்த தயாரிப்பாளர்: உடல்நிலை மோசமடைந்ததால் அவரால் தனது பிட்னெஸிலும் ஒழுங்குமுறையை கடைபிடிக்க முடியவில்லை சூழல் இப்படி இருக்க தயாரிப்பாளர் கேயார் ஒருமுறை, “அஜித்குமார் கார் ரேஸ், பைக் ரேஸ் போன்றவற்றை விட்டுவிட வேண்டும். இல்லையென்றால் சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
நம்ம ஏகேவா இப்படி: இதனையடுத்து அந்த சமயத்தில் அஜித் அளித்த பேட்டி ஒன்றில் இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “கண்ட நாயெல்லாம் அட்வைஸ் செய்ய தேவையில்லை” என தெரிவித்தார். இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் இப்போது எதுவுமே தெரியாத மாதிரி இருக்கும் அஜித்தா இப்படி பேசியிருப்பது என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.