திருப்பூர்: திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்கலம் ரவியும், திருப்பூர் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவராக உள்ள ஈஸ்வரனும் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். ஒருவருக்கு ஒருவர் சட்டையை கிழித்து கடுமையாக மோதிக்கொண்டனர். இது தொடர்பான காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பா.ஜ.க. திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவராக மங்கலம் ரவி என்பவர் உள்ளார். இதேபோல் திருப்பூர் மாவட்ட இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவராக ஈஸ்வரன் என்பவர் பதவி வகித்து வருகின்றார்.
இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று(நேற்று) பிரதமர் நரேந்திர மோடியின் மன் கி பாத் ( மனதின் குரல் ) நூறாவது நிகழ்ச்சி ஒளிபரப்பானது. மோடியின் மன் கி பாத் நிகழ்சசி குறித்து இந்து மக்கள் கட்சி நிர்வாகி ஒருவர் சமூக வலைதளங்களில் தவறாக பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து தாராபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்தில் ஈஸ்வரனை நேரில் சந்தித்து மங்கலம் ரவி கேள்வி கேட்டாராம். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியது. இருவருமே மாறி மாறி ஆக்ரோசமாக தாக்கி கொண்டார்கள். இருவருமே சட்டையை கிழித்து கட்டிப்புரண்டு நடுரோட்டில் சண்டை போட்டனர். அவர்களது ஆதரவாளர்களும் மோதிக்கொண்டனர்.
இதனை கண்ட போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மங்கலம் ரவி , ஈஸ்வரன் ஆகியோரை விலக்கிவிட்டனர். இதனிடையே சண்டையி சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.. இதில் காயமடைந்த மங்கலம் ரவி , ஈஸ்வரன் ஆகிய இருவரும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் பாரதிய ஜனதா கட்சி BJP யின் அசுர வளர்ச்சி 🙂
மாவட்ட தலைவர் திரு மங்களம் ரவி அவர்கள் குழுவினரும் திரு கொங்கு ரமேஷ் அவர்களுடைய ஆதரவாளர்களும் தாராபுரம் பேருந்து நிலையம் எதிரில் உள்ள கொங்கு உணவுக்கு முன்பு ஆயுதங்களுடன் தாக்கி கொண்ட காட்சி pic.twitter.com/B4zHfrpgte
— பொள்ளாச்சி அருண்குமார் (@PollachiArunoff) May 1, 2023