‘மனதின் குரலை’ பாராட்டிய  பில் கேட்ஸ் – நன்றி தெரிவித்த பிரதமர் மோடி

புதுடெல்லி: ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) நிகழ்ச்சியைப் பாராட்டியுள்ள மைக்ரோ சாஃப்டின் இணைநிறுவனர் பில் கேட்ஸுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,”எனது நண்பர் பில்கேட்ஸின் அங்கீகாரத்திற்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பூமியை சிறப்பானதாக மாற்றுவதற்கான இந்திய மக்களின் கூட்டு முயற்சியான மனதின் குரல் குறித்து பில்கேட்ஸூம் ஆர்வமாக உள்ளார். பிஎம்ஜிஎஃப்இந்தியாவின் ஆய்வில், எஸ்டிஜியுடன் மனதின் குரலின் அதிர்வுகள் சிறப்பாக எடுத்துகாட்டப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

முன்னாதாக, சனிக்கிழமை பில் கேட்ஸ் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில்,” மனதின் குரல் நிகழ்ச்சி, பொது சுகாதாரம், தூய்மைப்படுத்தல், பெண்களுக்கு பொருளாதார அதிகாரமளித்தல் உள்ளிட்ட முக்கியான விஷயங்களுடன் கூடிய நீடித்த வளர்ச்சிகளுடன் இணைந்த முக்கியமான சமூக பிரச்சினைகளுக்கு ஊக்கமளிக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.

ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியின் மூலமாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் தொடர்ந்து உரையாற்றி வந்தார். இந்த நிகழ்ச்சியின் 100- வது பகுதி ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பானது. இந்த நூறாவது பகுதி மனதின் குரல் நிகழ்ச்சியை அமெரிக்காவில் வாழும் இந்தியர்களும் கொண்டாடினர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு1.30 மணிக்கு (உள்ளூர் நேரம்) நியூ ஜெர்சியில் மனதின் குரல் சிறப்பு நேரலை புலம்பெயர் இந்தியர்களுடன் இணைந்து கேட்க முடிவு செய்திருந்தார். இதுகுறித்து 10 வருடங்களுக்கு முன்னால், இரவு 2.10 மணிக்கு அனைவரும் ஒரு இடத்தில் ஒன்றுகூடி, அவர்களுடன் இந்தியாவின் வெளியுறவு அமைச்சரும் அமர்ந்து இந்திய பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்பார்கள் என்று நான் சொல்லியிருந்தால் யாரும் நம்பிக்கூட இருக்க மாட்டார்கள். இது இந்தியர்களுக்கும் பிரதமர் மோடிக்கும் இருக்கும் உணர்ச்சிப்பூர்வமான ஒரு இணைப்பு” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.