விவாகரத்து கிடைத்ததை வேறலெவலில் கொண்டாடிய நடிகை: தீயாய் பரவும் போட்டோஸ்.!

சமீப காலமாக போட்டோ ஷுட் கலாச்சாரம் டிரெண்ட் ஆகி வருகிறது. திருமணம், வளைகாப்பு, கல்யாணத்துக்கு முந்தைய போன்ற பல மகிழ்ச்சியான தருணங்களை போட்டோ ஷுட் மூலம் நியாபகங்களாக சேகரித்து கொள்ளும் வழக்கம் பெருகி வருகிறது. இந்நிலையில் சீரியல் நடிகை ஒருவர் தனக்கு விவாகரத்து கிடைத்ததை போட்டோஷுட் எடுத்து கொண்டாடியுள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
சின்னத்திரையில் ஜி தமிழில் ஒளிப்பரப்பான ‘முள்ளும் மலரும்’ என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை ஷாலினி. அது மட்டுமில்லாமல் ‘சூப்பர் மாம்’ உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களிலும் இவர் கலந்துக்கொண்டுள்ளர். இவர் ரியாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிய முடிவு செய்தனர். இந்நிலையில் ஷாலினி, ரியாஸ் இருவரும் தற்போது விவாகரத்து செய்துள்ளனர். இதனை கொண்டாடும் விதமாக ஷாலினி போட்டோ ஷுட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதுதொடர்பாக அவர் தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ள பதிவில், குரலற்றவராக தங்களை உணரும் நபர்களுக்கு விவாகரத்து பெற்ற ஒரு பெண்ணின் செய்தி இது. ஒரு மோசமான திருமணத்தை விட்டுவிடுவது தவறில்லை. ஏனென்றால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க தகுதியானவர். எப்போதும் உங்களை குறைவாக எண்ணவே வேண்டாம்.

வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட நடன இயக்குனர்: அதிர்ச்சியில் திரையுலகம்.!

உங்களுக்குகாகவும், குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும் தேவையான விஷயங்களை செய்ய தயாராகுங்கள். விவாகரத்து ஒன்றும் தோல்வியல்ல. உங்கள் வாழ்க்கையில் மாற்றங்களை உருவாக்க ஒரு திருப்புமுனை. திருமணத்தை விட்டு வெளியே வருவதற்கு மிகப்பெரிய தைரியம் தேவை. தனித்து நில்லுங்கள். துணிச்சலான பெண்கள் அனைவருக்கும் சமர்பிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Sivakarthikeyan: திடீரென ஓய்வை அறிவித்த சிவகார்த்திகேயன்: ஷாக்கான ரசிகர்கள்.!

ஷாலினியின் இந்த விவாகரத்து போட்டோ ஷுட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களில் ரியாஷுடன் இருக்கும் போட்டோவை கிழிப்பதை போல் அவர் பதிவிட்டிருப்பது வைரலாகி வருகிறது. ஷாலினியின் இந்த விவாகரத்து போட்டோ ஷுட்டுக்கு நெட்டிசன்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

View this post on InstagramA post shared by shalini (@shalu2626)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.