வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி., வசூல் சாதனை குறித்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி.வசூல் ரூ. 1.87 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
2023 ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி. வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.87 லட்சம் கோடி என்ற தகவல் “இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய செய்தி” குறைந்த வரி விகிதங்களுக்கு இடையில், வரி வசூல் அதிகரித்து வருவது, ஒருங்கிணைப்பு மற்றும் இணக்கத்தை அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஜி.எஸ்.டி எவ்வாறு வெற்றி பெற்றுள்ளது என்பதைக் காட்டுகிறது. இவ்வாறு அதில் மோடி கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement