பிறந்தநாளில் நீரில் மூழ்கி உயிரிழந்த 19 வயது மாணவர்!


தமிழக மாவட்டம் காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் மதுபோதையில் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

பிறந்தநாளில் மது விருந்து

காஞ்சிப்புரம் மாவட்டம் பிள்ளையார் பாளையத்தைச் சேர்ந்தவர் மோகன்ராம்(19). கல்லூரி மாணவரான இவர் தனது பிறந்தநாளையொட்டி, இருங்குன்றப்பள்ளி பம்ப் அவுஸ் அருகே தன் நண்பர்களுக்கு மது விருந்து அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

மோகன்ராம் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் போதை தலைக்கேறியுள்ளது. அவர்கள் இருந்த பகுதியில் குளம் போல் நீர் தேங்கி இருந்துள்ளது.

அதனைப் பார்த்த மோகன்ராம் மதுபோதையில் தண்ணீரில் இறங்கியுள்ளார். அவருக்கு நீச்சல் தெரியாது என்பதால் சற்று நேரத்தில் நீரில் மூழ்கியுள்ளார்.

பிறந்தநாளில் நீரில் மூழ்கி உயிரிழந்த 19 வயது மாணவர்! | Kanchipuram College Student Dies On Birthday At 19

பரிதாபமாக பலியான மாணவர்

இதனை கவனித்த அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். மோகன்ராமை பேர் சொல்லி கூச்சலிட்டுள்ளனர்.

கூச்சல் சத்தம் கேட்டு அப்பகுதிக்கு வந்த சிலர், மோகன்ராமை நீரில் இருந்து வெளியே மீட்டுள்ளனர்.

அவரை சோதித்தபோது மூச்சு பேச்சு இல்லாமல் இறந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் மோகன்ராமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தனது பிறந்தநாளிலேயே 19 வயது கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

பிறந்தநாளில் நீரில் மூழ்கி உயிரிழந்த 19 வயது மாணவர்! | Kanchipuram College Student Dies On Birthday At 19 iStock



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.