தெலுங்கில் நடன இயக்குனராக இருப்பவர் சைதன்யா. இவர் ‘தீ’ எனும் நிகழ்ச்சியின் மூலம் நடன இயக்குனராக பிரபலமானார். இந்நிலையில் சைதன்யா தற்கொலை செய்து கொண்டுள்ளார். சூசைட்டுக்கு முன்பாக இவர் வெளியிட்ட வீடியோவும் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
தெலுங்கு சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் ‘தீ’ எனும் டான்ஸ் ஷோ மூலம் நடன இயக்குனராக பிரபலமானவர் சைதன்யா. நடன நிகழ்ச்சிகள் மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் இவர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிலையில் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி கடனால் அவதிப்பட்டு வந்த சைதன்யா தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆந்திரா மாநிலம் நெல்லூரில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட அவர் இறப்பதற்கு முன்பாக வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை கிளப்பியுள்ளது.
Sivakarthikeyan: திடீரென ஓய்வை அறிவித்த சிவகார்த்திகேயன்: ஷாக்கான ரசிகர்கள்.!
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், எனது அம்மா அப்பா என்னை நன்றாக பார்த்துக்கொண்டனர். எனது நண்பர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பண விஷயத்தில் என்மேல் இருந்த நல்ல மதிப்பை இழந்துவிட்டேன். கடன் வாங்கியிருந்தால் சரியாக கொடுக்க வேண்டும். என்னால் முடியவில்லை.
ஒட்டுமொத்த குடும்பத்துக்கு முன்பும் அசிங்கப்பட்டு நிற்கும் கோபி: ராதிகா செய்த காரியம்.!
இதுதான் என் கடைசி நாள். கடனால் ஏற்பட்ட பிரச்சனைகளை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை என உருக்கமாக பேசியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு ரசிகர்கள் தற்போது சோஷியல் மீடியாவில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.