ரஜினி குறித்த பேச்சு ஜெகன்மோகன் ரெட்டி மன்னிப்பு கேட்க வேண்டும் -சந்திரபாபு நாயுடு

விஜயவாடா

ஆந்திராவில் மறைந்தநடிகரும், முன்னாள் முதல்- மந்திரியுமான என்.டி.ராமாராவின் 100-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ரஜினி, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக பேசினார்.

இந்த நிலையில், புதுச்சேரி திருக்காஞ்சியில் நடைபெற்றுவரும் புஷ்கரணி விழாவில் கங்கா ஆரத்தியில் கலந்துகொள்ள வந்திருந்த ஆந்திர மாநில மந்திரி ரோஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்

ரஜினி சார் அரசியல் வேண்டாம்ன்னு நினைக்கும்போது அரசியல் பேசக் கூடாது.

ரஜினி சார் தெரியாம தப்பா பேசிருக்காருன்னு நினைச்சேன், ஆனா தெரிஞ்சு தப்பா பேசிருக்காரு. அதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு.

தெலுங்கு ஆளுங்க எல்லாருமே ரஜினி சார சூப்பர் ஸ்டாரா விரும்புறாங்க. ஆனா இன்னைக்கு அவர் பேசினதைப் பார்த்து தெலுங்கு ஆளுங்க, என்.டி.ஆர் அபிமானி எல்லாருமே கோபத்தோட இருக்காங்க.

ரஜினி சார்னா டாப்ல, அதுக்கு மேல-னு ஒரு ஐடியாவில் இருப்போம். ஆனா இன்னைக்கு ஜீரோ ஆயிட்டார். என கூறினார்.

மேலும் ரஜினி கருத்தை எம்.எல்.ஏ.க்கள் கோடாலி நானி, மதுசூதன்ரெட்டி உள்ளிட்டோரும் விமர்சித்திருந்தனர்.

ரஜினிகாந்தை, ரோஜா உள்ளிட்டோர் விமர்சித்ததற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என சந்திரபாபுநாயுடு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசின் மீது ரஜினிகாந்த் எந்த குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை. தனது கட்சி தலைவர்களை ஜெகன்மோகன் ரெட்டி கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். தேவையில்லாத விமர்சனங்களை தெலுங்கு மக்கள் ஏற்க மாட்டார்கள். விமர்சித்தவர்களை மன்னிக்கவும் மாட்டார்கள்.

ரஜினிகாந்தை, ரோஜா உள்ளிட்டோர் விமர்சித்ததற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஜெகன்மோகன் ரெட்டி மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.