ஊழல் செய்தால் சொத்துக்களை பறிமுதல் செய்க – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஊழல் செய்யும் அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகளை வகுப்பது தொடர்பாக, தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், சிவன்தாங்கலை சேர்ந்த விஏஓ ராஜேந்திரன், அவரின் மனைவி தனலட்சுமி, மகன் டெல்லி ராஜா ஆகிய மூன்று பேரும், ஸ்ரீ பெரும்புதூரில் 2000 சதுர அடி நிலத்தை வாங்கியுள்ளனர்.

சுமார் 11 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலத்தை 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாக அவர்கள் மீது குற்றப்பிரிவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி விஏஓ ராஜேந்திரன், அவரின் மனைவி, மகன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம், அரசு துறைகளில் அதிக அளவில் உள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக, தமிழக அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதன் காரணமாகத்தான் தமிழகத்தில் லஞ்ச லாவண்யம் வளர்ந்து வருகிறது. தமிழக அரசு அதிகாரிகளுக்கு சட்டத்தின் மீதான பயம் பயத்தை காட்டினால் தான்,  அரசு துறைகளில் உள்ள ஊழலை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

மேலும் இது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட  நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம், வழக்கு விசாரணையை வரும் ஜூன் ஏழாம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.