ஐதராபாத் :நடிகை சமந்தா அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லாத நிலை காணப்படுகிறது.
யசோதா மற்றும் சாகுந்தலம் படங்கள் பான் இந்தியா படங்களாக வெளியான நிலையில், சமீபத்தில் வெளியான சாகுந்தலம் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
அடுத்ததாக சிட்டாடல் வெப் தொடரில் நடித்து வருகிறார் சமந்தா. இந்தத் தொடரில் வருண் தவான் ஜோடியாக நடித்துள்ளார்.
நடிகை சமந்தாவின் டாட்டூ: நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். தற்போது இந்தியிலும் இவர் நடித்து வருகிறார். தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் நடித்து ரசிகர்களை கவர்ந்த சமந்தா தற்போது சிட்டாடல் வெப் தொடரில் நடித்து வருகிறார். ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் இவர் அடுத்தடுத்த இந்த வெப் தொடர்களில் நடித்துள்ளார். மேலும் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்திலும் நடித்துள்ளார்.
இந்தப் படம் வரும் செப்டம்பர் மாதத்தில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இவரது நடிப்பில் வெளியான யசோதா படம் மிகச்சிறப்பான விமர்சனங்களை பெற்று வசூல்ரீதியாகவும் வெற்றிப் பெற்றது. தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது நடிப்பில் சாகுந்தலம் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. படம் மிகுந்த எதிர்பர்ப்பிற்கிடையில் பான் இந்தியா படமாக வெளியானது. ஆனால் ரசிகர்களை கவரத்தவறியது.
சிட்டாடல் தொடரின் பிரீமியர் ஷோ லண்டனில் நடைபெற்ற நிலையில், கருப்பு நிற கிளாஸான உடையில் இந்த நிகழ்ச்சியில் வருண் தவானுடன் இணைந்து கலந்துக் கொண்டார் சமந்தா. இந்த நிகழ்ச்சியில் இவர் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்திருந்தார். இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டானது. தன்னுடைய நோய் பாதிப்பிலிருந்து சிறிது சிறிதாக வெளியில் வரும் சமந்தா, அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள சமந்தா, நேஷனல் க்ரஷ்ஷாக மாறியுள்ளார். தமிழில் இவருக்கு வாய்ப்புகள் இல்லாத நிலையில், தெலுங்கு, இந்தியில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது சமீபத்திய புகைப்படங்களில் அவரது இடுப்புப்பகுதியில் உள்ள அவரது முன்னாள் கணவரின் பெயரை குறிப்பிடும் Chay என்ற டாட்டூவை இன்னும் அழிக்காமல் உள்ளது தெரியவந்துள்ளது. சமூக வலைதளங்களில் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்களை நீக்கியுள்ளார் சமந்தா. இந்நிலையில் இந்த டாட்டூவை இன்னும் அழிக்காமல் உள்ளார் சமந்தா.
டோலிவுட் நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட சமந்தா, நான்கே ஆண்டுகளில் தன்னுடைய திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டார். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் இருந்த புகைப்படங்களை அழித்த சமந்தா, இந்த டாட்டூவை அழிக்காமல் உள்ளது, ரசிகர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுகுறித்து சமந்தா விரைவில் விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.