கர்நாடக மாநில சட்டமன்றத்துக்கு மே 10 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக திமுக தொண்டர்கள் வாக்கு சேகரிக்க வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.