மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவை திட்டம் நாடு முழுவதும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் முக்கிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்து வருகிறார்.
அந்த வகையில் நாடு முழுவதும் புதிய வழித்தடத்தில் 31 வந்தே பாரத் ரயில்கள் இயக்க உள்ளதாகவும், அதில் தமிழகத்தில் 7 வந்தே பாரத் ரயில்கள் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் 75 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த 75 ரயில்களில் 31 ரயில்களின் சேவைகள் மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இந்த 31 வந்தே பாரத் ரயில் சேவையில் தமிழகத்தில் குறிப்பிட்ட வழிதடத்தில் 7 வந்தே பாரத் ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மாதம் மதுரை ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில்களை பராமரிக்க ஏதுவாக ரயில் நடைமேடைகள் மாற்றி அமைப்பதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.