வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெஷாவர்-நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பழம்பெரும் ஹிந்தி நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான மறைந்த ராஜ்கபூரின் பங்களா உள்ளது.
‘கபூர் ஹவேலி’ என்ற பெயரில் கைபர் பக்துன்க்வா மாகாணம் பெஷாவரில் அமைந்துள்ள இந்த பங்களாவை, பாக்., அரசு தேசிய பாரம்பரிய சின்னமாக கடந்த 2016ல் அறிவித்தது.
இந்த பிரம்மாண்ட மாளிகையை இடித்துவிட்டு வணிக வளாகம் கட்ட, இதன் தற்போதைய உரிமையாளர் முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து இந்த பங்களாவிற்கு உரிமை கோரும் மனுவை அவர் தாக்கல் செய்தார்.
இதை நேற்று நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மாளிகையின் வரலாற்று முக்கியத்துவத்தை கருத்தில் வைத்து, இதை அந்நாட்டு தொல்லியல் துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் போலீஸ் அதிகாரியாக இருந்த ராஜ் கபூரின் தாத்தா பசவேஷ்வர்நாத் கபூர், பெஷாவருக்கு மாற்றலானபோது, 1918ல் இந்த இடத்தை விலைக்கு வாங்கினார்.
பின்னர் மூன்று அடுக்குகளுடன் 40 அறைகள் உடைய அரண்மனை போன்ற மாளிகை கட்டப்பட்டது. பழம்பெரும் நடிகர் ராஜ்கபூர், அவரின் மாமா திரிலோக் கபூர் ஆகியோர் இங்குதான் பிறந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement