இனி SPAM அழைப்புகள் வராது! அப்படி வந்தால் உடனே இத பண்ணுங்க! TRAI அதிரடி!

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) மே 1 முதல், AI ஃபில்டர்ஸ்களை பயன்படுத்தி ஸ்பேம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்-களை தடுக்க புதிய விதிகள் செயல்படுத்தப்படும் என்று முன்னரே அறிவித்திருந்தது.  அதன்படி இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான ட்ராய், இந்தியாவிலுள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இந்த AI ஃபில்டர்ஸ்களை அவர்களது கணினியில் சேர்க்குமாறு உத்தரவினை பிறப்பித்துள்ளது.  இந்த புதிய ஃபில்டர்ஸ்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் ஸ்மார்ட்போன்களுக்கு வரக்கூடிய போலியான அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களைக் கண்டறிந்து அவற்றை தடுக்கும்.  இந்தியாவிலுள்ள பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களான வோடஃபோன், ஏர்டெல், ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களால் தனது பயனர்கள் அவதிப்படுவதை தடுக்கும் வகையில் இந்த AI ஃபில்டர்ஸ்களை தங்கள் சேவையில் செயல்படுத்த தயாராகி வருகின்றன.  

ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே தங்கள் வாடிக்கையாளர்களுக்கு AI ஃபில்டர்ஸ்களை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது.  மறுபுறம் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் போலி அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களை தடுக்கும் பொருட்டு AI ஃபில்டர்ஸ்களை நிறுவ தயாராகி வருகிறது.  அதேபோல மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் போலி அழைப்புகள் மற்றும் மெசேஜ்களை தடுக்க உதவும் ஃபில்டர்ஸ்களை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) நிர்ணயித்துள்ள காலக்கெடுவிற்குள் செயல்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ட்ராய் தற்போது வெளியிட்டுள்ள புதிய அறிவிப்புகளின்படி, போலி அழைப்புகள் மற்றும் போலி மெசேஜ்கள் தடை செய்யப்படுவது மட்டுமின்றி, 10 இலக்க தொலைபேசி எண்களுக்கு அடிக்கடி வரக்கூடிய விளம்பர அழைப்புகளும் தடை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  விளம்பர அழைப்புகள் அடிக்கடி வருவதால் முக்கியமான அழைப்புகளை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் பலரும் எரிச்சலடைகின்றனர், வாடிக்கையாளர்களின் வசதியை பேணும் வகையில் ட்ராய் இந்த முடிவை எடுத்திருக்கிறது.  

இதுதவிர ட்ராய் அழைப்பாளர் ஐடி அம்சத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, இந்த அழைப்பாளர் ஐடி அம்சத்தின் மூலமாக அழைப்பாளரின் பெயர் மற்றும் புகைப்படம் மொபைல் திரையில் காண்பிக்கப்படும்.  இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற டெலிகாம் ஆபரேட்டர்கள் அழைப்பாளர் ஐடி அம்சத்தை செயல்படுத்துவது தொடர்பாக ட்ரூகாலர் செயலியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.  இருப்பினும், தனியுரிமைக் கவலைகளைக் கருத்தில் கொண்டு நிறுவனங்கள் இந்த அம்சத்தை செயல்படுத்துவதைத் தவிர்த்து வருகின்றன.  ட்ரூகாலர் செயலி பயன்படுத்துவதன் மூலம் நமக்கு அழைப்பு விடுத்தவர் யார் என்கிற தகவலை நாம் தெரிந்துகொள்ள முடியும்.

தொழில் அமைப்பு சிஓஏஐ ஆனது இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூறுகையில், காலிங் நேம் ப்ரசன்ட்டேஷன் (சிஎன்ஏபி) செயல்படுத்துவது கட்டாயமாக இருக்கக்கூடாது, ஆனால் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு விருப்பமாக இருக்க வேண்டும் என்று கூறியது.  ஆனால் அவர்கள் செலவுகளை மேற்கோள் காட்டி, ஒழுங்குமுறை ஆணையமான ட்ராயிடம் தொழில்நுட்ப, தனியுரிமை மற்றும் ஒழுங்குமுறைத் தாக்கல் செய்தனர்.  ட்ராய் கொண்டுவரும் இந்த புதிய நடவடிக்கையின் மூலம், ஸ்பேம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களைத் தடுக்கப்பட்டு தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளில் நடைபெறும் மோசடிகள் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த AI அடிப்படையிலான ஃபில்டர்கள் எந்தவொரு வாடிக்கையாளரின் எண்ணிலும் வங்கி அல்லது பிற மார்க்கெட்டிங் நிறுவனங்களின் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களை தடுக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.