குஜராத்தின் பாரம்பரிய தாண்டியா நடனத்தை ஆடிய கவர்னர் தமிழிசை..!!

தேசிய ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் விதமாக புதுச்சேரியில் வாழும் குஜராத்தி மற்றம் மராத்தி சமூகத்தினர் தங்கள் கலாச்சார உடையில் புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் மராத்தி பாரம்பரிய, கலாச்சாரப் பாடல்கள், குஜராத்தி தாண்டியா மற்றும் கார்பா நடனங்கள் நடைபெற்றன. நடனக் கலைஞர்களுடன் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு தாண்டியா நடனம் ஆடினார். குஜராத்தின் பாரம்பரிய தாண்டியா நடனத்தை உடன் ஆடும்படி அப்பெண்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க கவர்னர் தமிழிசையும் நடனமாடினார்.

இதனை தொடர்ந்து பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை, மதம், மொழி, கலாச்சாரம் என வேறுபட்டாலும் நாம் அனைவரும் இந்தியர்களே. அரசியலுக்காக எந்த வேற்றுமையும் ஏற்படுத்தாமல் தேச ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். இந்த அடையாளத்தை நாமெல்லாம் மேம்படுத்தி வருகிறோம். பிரதமர் மோடி, தமிழ் சங்கமம் என்று நடத்திக் காட்டினார். இந்த சங்கமம் நாமெல்லாம் இணையானவர்கள் என்று சொல்வதற்காகத்தான் என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.