பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் மாதாந்திர உற்பத்தி எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. பல்வேறு புதிய நகரங்களிலும் மின்சார ஸ்கூட்டர் சந்தையை விரிவுப்படுத்த உள்ளது.
சமீபத்தில் பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஷர்மா, செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், எதிர்கால தேவைகளுக்கு ஈடுகொடுக்கம் வகையிலான சேட்டக் பிளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டு இலகுவாக மாற்றும் வகையிலான பேட்டரி ஸ்கூட்டர், உட்பட அனைத்து மின்சார ஸ்கூட்டர் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையிலான மாடல்கள் அறிமுகம் செய்ய உள்ளது.
ஜூன் 2023 முதல் பஜாஜ் சேட்டக் இ-ஸ்கூட்டரின் உற்பத்தியை ஒரு மாதத்திற்கு 10,000 யூனிட்டுகளுக்கு மேல் அதிகரிக்க உள்ளது. இந்நிறுவனம் அதன் EV விநியோகச் சங்கிலியை மறுசீரமைப்பு செய்வதனை உறுதிப்படுத்தியது. உற்பத்தியை அதிகரிப்பதனால் செலவுகளைக் குறைக்க உதவும்.
2023 Bajaj Chetak
சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3 கட்ட PMSM மோட்டார் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 5 bhp பவர் மற்றும் 20 Nm டார்க் வழங்குகின்றது. இதன் அதிகபட்ச வேகம் 63km/h ஆக உள்ளது. சமீபத்தில் வந்த புதிய மாடலின் ரேஞ்சு 108 கிமீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பாக இந்த மாடல் முன்பாக 90 கிமீ வழங்கி வந்தது.
போட்டியாளர்கள் சிறப்பான ரேஞ்சு அதிகப்படியான வேகத்தை வழங்கி வருவதனால் சேட்டக் ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை பெரிய அளவில் பதிவு செய்யவில்லை.
2023 பஜாஜ் சேட்டக் பிரீமியம் வேரியண்ட் விலை ₹. 1.51 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் சென்னை)