பொதுவாகவே பலருக்கும் டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிட வேண்டும் என ஆசைப்படுவார்கள், அவர்களுக்காக வீட்டிலேயே பிஸ்கட் செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
-
பட்டர் – 125g
- சர்க்கரை – 60g
- உப்பு – 1/2 தே.கரண்டி
- கோதுமை மா – 150g
செய்முறை
-
ஒரு பாத்திரத்தில் பட்டர் மற்றும் சர்க்கரை சேர்த்து beater மூலமாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
-
பின்னர் கோதுமை மா மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் அரைக்க வேண்டும்.
- ஓரளவாக அரைந்தவுடன், சற்று கையில் சப்பாதி மா போன்று கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
-
பின் சப்பாதிக்கு போன்று உருட்டி எடுக்க வேண்டும். பிஸ்கட் அச்சியில் வடிவமைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதன் மேல் ஒரு தட்டை வைத்து அதற்கு மேல் மீண்டும் அந்த பிஸ்கட்டுகளை வைத்து வேக வைக்க வேண்டும்.
-
அதாவது ஓவன் இல்லாமல் எப்படி வேக வைப்பது எபன்ற முறைப்படி. இவ்வாறு செய்தால் சுவையான மொறு மொறு பிஸ்கட் தயார்.