இந்தி பேசும் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டை பாரபட்சத்துடனே மத்தியில் ஆளும் அரசுகள் நடத்துகின்றன என்ற குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்த வண்ணம் உள்ளன. மாநில அரசுகளின் உரிமையை போராடி பெற்றுக் கொண்டே தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றுள்ளன தமிழகத்தை ஆண்ட கட்சிகள்.
கர்நாடகாவில் பாஜக தோற்கும் -புகேழந்தி ஆருடம்
அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுமே ஆட்சியில் இருக்கும் போது மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக முன்னெடுத்ததன் விளைவாக கல்வி, தொழில், தனி நபர் வருமானம், மருத்துவம், உள் கட்டமைப்பு என பல துறைகளில் தமிழகம் பிற மாநிலங்களை விட முன்னணியில் நிற்கிறது.
தமிழ்நாட்டில் இலவச திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு மக்களை சோம்பேறிகளாக்குகின்றனர் என்ற குற்றச்சாட்டு வடக்கே இருந்து அவ்வப்போது எழும். இங்குள்ளவர்கள் கூட அப்படி பேசுவது உண்டு. ஆனால் அவை இலவசங்கள் அல்ல, மக்கள் நலத் திட்டங்கள். அதனாலே இங்கு வளர்ச்சி சாத்தியமாகியிருக்கிறது என்பதை இங்குள்ளவர்கள் புரிந்து கொண்டார்களோ இல்லையோ பிற மாநில அரசுகளும், தேசிய கட்சிகளும் புரிந்து கொண்டு வருகின்றன. அதன் விளைவாகவே தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் பிற மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மலிவு விலையில் உணவு வழங்கும் அம்மா உணவகம் திட்டம், 100 யூனிட் இலவச மின்சாரம், இலவச அரிசி, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு இலவச திட்டங்கள், குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகை, அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் ஆகிய திட்டங்கள் பிற மாநில அரசுகளுக்கு முன் மாதிரியாக உள்ளன.
இலவச திட்டங்களை கேலி செய்து வந்த பாஜக தற்போது தமிழ்நாட்டின் திட்டங்களை பின் தொடர தொடங்கியுள்ளது.
கட்சியோ தமிழ்நாட்டு மாடலை கிட்டதட்ட பிரதியெடுத்து அறிவித்து வருகிறது.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகளை எடுத்துப் பார்த்தால் அதில் தமிழ்நாட்டின் தாக்கம் எவ்வளவு அதிகமாக இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், “வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாய் உரிமைத் தொகை, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் உள்ள உறுப்பினர்களுக்கு தலா 10 கிலோ அரிசி இலவசம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு இரண்டு வருடத்திற்கு மாதம் 3000 ரூபாய் நிதியுதவி, டிப்ளமோ முடித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு இரண்டு வருடத்திற்கு மாதம் 1500 ரூபாய் நிதியுதவி, கர்நாடக மாநிலம் முழுவதும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி” என பல அம்சங்கள் உள்ளன.