2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி இரவு மற்றும் மே 01ஆம் திகதி அதிகாலை கல்பிட்டி, பராமுனை மற்றும் குடாவ கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 836 கிலோவிற்கும் அதிகமான பீடி இலைகளுடன், ஒரு டிங்கி படகும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இருவர் கைது செயய்பப்பட்டுள்ளனர்.
கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடற்படையினர், தொடர்ச்சியான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பலின் மூலம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி இரவு பராமுனை கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று அவதானிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்;டது.
அதில், சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 17 உறைகளில் அடைக்கப்பட்ட 550 கிலோ 750 கிராம் பீடி இலைகளுடன் குறித்த டிங்கி படகு மற்றும் 2 சந்தேக நபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இலங்கை கடற்படைக் கப்பலான விஜயா மே 01ஆம் திகதி அதிகாலை குடாவ கடற்கரையில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, அந்த கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 09 உறைகளில் அடைக்கப்பட்ட 286 கிலோ 200 கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த தேடுதல் நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18 மற்றும் 23 வயதுகளையுடைய கல்பிட்டி ஆனவாசலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், டிங்கி படகு மற்றும் 836 கிலோ 950 கிராம் பீடி இலைகள் என்பவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.