இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் முதன்மையான இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. ரேஞ்சு, பேட்டரி திறன் , சிறப்பம்சங்கள் மற்றும் தமிழ்நாடு ஆன்-ரோடு விலையை அறிந்து கொள்ளலாம்.
ஏதெர் 450x, டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேட்டக், வீடா வி1 உட்பட பல்வேறு ஸ்கூட்டர்களை எதிர்கொள்ளுகின்ற ஓலா S1 Air, S1, S1 pro என மூன்று மாடல்களில் பல்வேறு மாறுபட்ட பேட்டரி திறன் பெற்றதாக அமைந்துள்ளது.
Ola S1 Air
ஓலா நிறுவனத்தின் குறைந்த விலை மாடலாக துவங்குகின்ற ஓலா எஸ்1 ஏர் ஸ்கூட்டரில் 2kWh, 3kWh, மற்றும் 4kWh என மூன்று விதமான பேட்டரி ஆப்ஷனை கொண்டுள்ளது. அதிகபட்ச வேகம் 85Km/hr ஆக உள்ளது. 0-100% சார்ஜிங் செய்ய அதிகபட்சமாக 4.5 மணி நேரம் தேவைப்படும்.
Ola S1 Air Specs | |
Battery Capacity | 2kWh/3kWh/4kWh |
Motor Type | PMSM |
Power (kW) | 4.5 kW |
Torque (Nm) | 58 Nm |
Top Speed | 85 km/hr |
Range (km) | 85km/125km/165km (Eco) |
Modes | Eco, Normal, Sports |
Acceleration (0-60Km) | 9.3 Secs |
நிகழ் நேரத்தில் கிடைக்கின்ற தோராயமான ரேஞ்சு 2Kwh மாடல் 60 கிமீ வரை, 3Kwh மாடல் 90 கிமீ வரை மற்றும் 4Kwh மாடல் 110 கிமீ வரை கிடைக்கும்.
Ola S1 Air 2kWh – ₹ 91,854
Ola S1 Air 3kWh – ₹ 107,937
Ola S1 Air 4kWh – ₹ 1,17,985
Ola S1
ஓலா எலக்ட்ரிக் S1 ஸ்கூட்டரில் 2kWh, மற்றும் 3kWh என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. S1 எலக்ட்ரிக் 3kWh ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் 95Km/h மற்றொரு மாடலான S1 2kWh பேட்டரி பேக் கொண்டது 90Km/h வெளிப்படுத்துகின்றது. 0-100% சார்ஜிங் செய்ய அதிகபட்சமாக 5.30 மணி நேரம் தேவைப்படும்.
Ola S1 Air Specs | |
Battery Capacity | 2kWh/3kWh |
Motor Type | PMSM |
Power (kW) | 5.5 kW |
Torque (Nm) | 58 Nm |
Top Speed | 90 km/hr |
Range (km) | 91km/141km (Eco) |
Modes | Eco, Normal, Sports |
Acceleration (0-60Km) | 5.9 Secs |
நிகழ் நேரத்தில் கிடைக்கின்ற தோராயமான ரேஞ்சு 2Kwh மாடல் 65 கிமீ வரை, 3Kwh மாடல் 90-100 கிமீ வரை கிடைக்கும்.
Ola S1 Air 2kWh – ₹ 108,854
Ola S1 Air 3kWh – ₹ 127,937
Ola S1 Pro
டாப் வேரியண்ட் மாடலாக ஒலா எலக்ட்ரிக் விற்பனை செய்கின்ற S1 புரோ பேட்டரி ஸ்கூட்டரில் மிகவும் சக்திவாய்ந்த 4 kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டு அதிகபட்ச வேகம் 116Km/h மற்றும் முழுமையான சிங்கிள் சார்ஜில் 181km ரேஞ்சு வழங்கும் என IDC மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 0-100% சார்ஜிங் செய்ய அதிகபட்சமாக 6.30 மணி நேரம் தேவைப்படும்.
Ola S1 Air Specs | |
Battery Capacity | 4kWh |
Motor Type | PMSM |
Power (kW) | 5.5 kW |
Torque (Nm) | 58 Nm |
Top Speed | 116 km/hr |
Range (km) | 181km (Eco) |
Modes | Eco, Normal, Sports, Hyper |
Acceleration (0-60Km) | 4.5 Secs |
நிகழ் நேரத்தில் கிடைக்கின்ற ஓலா S1 புரோ தோராயமான ரேஞ்சு 135-140 கிமீ வரை உள்ளது.
ஓலா S1 புரோ தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 1,40,599
(All Ola Electric Price TamilNadu on-Road)
கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆன்-ரோடு விலை பட்டியல் தோராயமானது, விலை மாறுதலுக்கு உட்பட்டது.