பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள கார்த்தி தனது நடிப்புத் திறமை மூலம் ரசிகர்களை ஈர்த்துள்ளார். முதல் பாகம் வெற்றியடைந்ததை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் த்ரிஷா-வுடனான ரொமான்ஸ் காட்சிகள் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. அதேவேளையில் நடிகர் கார்த்தி-க்கு வெளிநாட்டு ரசிகர்களும் இருக்கிறார்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. கார்த்தியின் தீவிர ரசிகர்களான ஜப்பானைச் சேர்ந்த டெருமி மற்றும் ஐசாவ் சான் நடிகர் கார்த்தியை சந்திக்க நேற்று சென்னை வந்துள்ளனர். […]