சென்னை: பீட்டல் பால் மரணமடைந்த நிலையில், வனிதா விஜயகுமாரின் முன்னாள் கணவர் பீட்டர் பால் மறைவு என மீடியாக்களில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், சட்டப்படி பீட்டர் பால் என் கணவரே கிடையாது என்றும் நாங்கள் சட்டப்படி திருமணமே செய்துக் கொள்ளவில்லை. அதனால், நான் யாருக்கும் அஞ்சலி செலுத்தப் போவதில்லை. நான் இப்போ சந்தோசமா இருக்கேன் என வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில், அந்த விளக்கத்தை பார்த்த ரசிகர்கள் மகள்கள் முன்னிலையில் செய்த திருமணம் எல்லாம் சும்மாவா? என விளாசி வருகின்றனர்.
பீட்டர் பால் மரணம்: கடந்த 2020ம் ஆண்டு பீட்டர் பால் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே நடிகை வனிதா விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டார். அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பின.
பீட்டர் பாலின் முதல் மனைவி பெரிய பஞ்சாயத்தே வைத்த போது, வனிதா விஜயகுமார் அதையெல்லாம் எதிர்த்து பேசி வந்தார். மேலும், யூடியூப் சேனலை ஆரம்பித்து பீட்டர் பாலுடன் வீடியோ விளக்கம் எல்லாம் கொடுத்தார்.
ஆனால், சில மாதங்களிலேயே பீட்டர் பால் உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையில், உடனடியாக அவரிடம் இருந்து ஒதுங்கி விட்டார் நடிகை வனிதா விஜயகுமார் என விமர்சனங்கள் வைகக்ப்பட்டுள்ளன. இந்நிலையில், பீட்டர் பால் சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், அவர் தனது கணவரே இல்லை என வனிதா விஜயகுமார் அறிவித்துள்ளார்.
வனிதா விஜயகுமார் அதிரடி விளக்கம்: நடிகை வனிதா விஜயகுமாரின் முன்னாள் கணவர் பீட்டர் பால் மரணம் என செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அது தொடர்பாக வனிதா விஜயகுமார் அதிரடி விளக்கம் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.
அதில், பீட்டர் பாலுக்கும் தனக்கும் திருமணமே ஆகவில்லை என்றும். சட்டப்படி பீட்டர் பால் என் கணவரும் இல்லை. நான் அவருக்கு மனைவியும் இல்லை. நான் எப்போதுமே சிங்கிள் உமனாக என் குழந்தைகளை வளர்த்து வருகிறேன்.
இதன் காரணமாக யாருடைய இழப்புக்கும் நான் வருத்தம் தெரிவிக்கத் தேவையில்லை. நான் என் வாழ்க்கையை ரொம்ப சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன். பீட்டர் பால் என் கணவர் என செய்திகளை பரப்ப வேண்டாம் என பத்திரிகைகளுக்கும் மீடியாக்களுக்கும் செய்திச் சேனல்களுக்கும் வனிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அப்போ அப்படி சொன்னீங்களே: வனிதா விஜயகுமாரின் இந்த அறிவிப்பை பார்த்த அவரது ரசிகர்கள், அதையெல்லாம் கண்டு கொள்ளாதீர் சும்மா விடுங்க என ஆறுதல் கூறி வருகின்றனர்.
அதே சமயம், நெட்டிசன்கள் சிலர், 2020ம் ஆண்டு பீட்டர் பால் தான் என் கணவர். சட்டம் எல்லாம் எங்களை ஒன்னுமே பண்ணாது என பேசினீங்க, இப்போ பீட்டர் பாலும் நானும் உறவில் மட்டும் தான் இருந்தோம். திருமணமே செய்துக் கொள்ளவில்லை என அப்படியே அந்தர் பல்டி அடிச்சிருக்கீங்களே ஏன்? என விளாசி வருகின்றனர்.