வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நான்கு நாள் பயணமாக தென் கொரியா சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் , ஆசிய வளர்ச்சி வங்கி தலைவரை சந்தித்து பேசினார்.
ஆசிய வளர்ச்சி வங்கியின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க, தென் கொரியாவின் இன்சினோன் நகருக்கு, 4 நாள் அரசு முறைப்பயணமாக நிர்மலா சீதாராமன் சென்றுள்ளார்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசட்சுகு அசக்வாவை நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார்.
அப்போது, ஆசிய வளர்ச்சி வங்கிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் எனக்கூறிய அவர், வளரும் நாடுகளுக்கு, வங்கி எப்படி உதவ முடியும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இந்தியாவிற்கு தொடர்ந்து உதவி செய்ய வேண்டும். இந்தியாவின் வளர்ச்சியானது, சர்வதேச அளவிலும் பிராந்திய அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement