ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணின் டயட்டிலும் இருக்க வேண்டிய உணவுகள்.!

கோடை காலம் எப்போதும் மற்ற சீசன்களை விட கர்ப்பிணிப் பெண்களுக்கு சவாலானதாக இருக்கும். கோடை நேரத்தில் நிலவும் அதிக வெப்பம் கர்ப்பிணிகளுக்கு டிஹைட் மற்றும் பிற உடல்நல பிரச்சனைகளை எளிதாக ஏற்படுத்தி விடும்.எனவே வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் பெண்கள் கோடை காலத்தில் ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுவது மிக முக்கியம்.

கர்ப்பிணிகள் தங்களது கர்ப்ப காலத்தில் கோடை சீசனை சந்திக்க நேர்ந்தால் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.வைட்டமின்கள் சி, ஈ மற்றும் கே நிறைந்துள்ளதால் கர்ப்பிணிப் பெண்கள் பச்சை இலை காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும்.பச்சை காய்கறிகளில் ஃபைபர் சத்துக்கள் ஏராளம் எனவே இது கர்ப்ப காலத்தில் மலச்சிக்கலை எதிர்த்து போராட கர்ப்பிணிகளுக்கு உதவுகின்றன.

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு அல்லது சாத்துக்குடி உள்ளிட்டவற்றில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்றவை. சிட்ரஸ் பழங்கள் கர்ப்பிணிகளின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுவதோடு மற்றும் வெயில் அதிகம் இருக்கும் நாட்களில் எனர்ஜி அளவை அதிகரிக்கின்றன.

பெண்கள் தங்கள் கர்ப்பகாலத்தில் போதுமான அளவு கார்போஹைட்ரேட்ஸ்களை பெறுவதை உறுதிசெய்ய, முழு தானியங்களை தங்கள் டயட்டில் சேர்த்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள்.முழு தானியங்களில் இருக்கும் வைட்டமின் பி, மினரல்ஸ் மற்றும் ஃபைபர் சத்து கரிப்பினிக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்கின்றன.

கர்ப்ப காலத்தில் கரிப்பிணிகளுக்கு மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் லிப்பிட்ஸ் மிகவும் அவசியமானவை. நல்ல கொழுப்புகள் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை மற்றும் கண்கள், நஞ்சுக்கொடி மற்றும் பிற திசுக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. நட்ஸ், சீட்ஸ் மற்றும் நட் பட்டர்ஸ் உள்ளிட்டவற்றில் நல்ல லிப்பிட்ஸ்கள் அதிகம் காணப்படுகின்றன. ஆளி விதைகள், நேச்சுரல் பீனட் பட்டர் மற்றும் ஆலிவ் ஆயில் போன்றவற்றில் ஆரோக்கியமான லிப்பிட்ஸ்கள் ஏராளமாக காணப்படுகின்றன.

அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு புரோட்டின், இரும்பு மற்றும் ஜிங்க் உள்ளிட்டவற்றின் அருமையான ஆதாரமாக மீன் இருக்கிறது. கருவின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அத்தியாவசிய தாதுக்கள் மீனில் நிறைந்துள்ளன. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் டோகோசாஹெக்ஸெனோயிக் அமிலம் நிறைந்த மீன்கள் கருவிலிருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.