கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் 2023 ஏப்ரல் 28 ஆம் திகதி இடம்பெற்ற 2021-2022 ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கும் நிகழ்வில், இலங்கை கடற்படை திருகோணமலை கடற்படைத் கப்பல்துறையில் சுற்றாடல் பாதுகாப்புக்காக மேற்கொள்கின்ற சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்பட்ட தங்க விருது கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி மற்றும் தன்னார்வ கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க குமார கௌரவ ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை கடற்படை அனைத்து கடற்படை கட்டளைகளையும் உள்ளடக்கி சுற்றாடல் பாதுகாப்பு திட்டங்களை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இதன்படி, இலங்கை கடற்படையினரால் சுற்றாடல் பாதுகாப்புக்காக முன்னெடுக்கப்படும் விசேட வேலைத்திட்டங்களை கௌரவித்து இதற்கு முன்னர் திருகோணமலை கடற்படை கப்பல்துறை 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதி சுற்றாடல் விருதை பெற்றுள்ளதுடன், 2021-2022 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கும் நிகழ்வில் சுற்றாடல் பாதுகாப்புக்கான தங்க விருதையும் வென்றுள்ளது. அதன் படி திருகோணமலை கடற்படை கப்பல்துறை குறித்த விருது மூன்று முறை பெற்றுள்ளது.
மேலும், மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கும் நிகழ்வில், கைத்தொழில்கள், வர்த்தகங்கள் மற்றும் திட்டங்கள், நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் சமூகம் ஆகிய முக்கிய துறைகளின் கீழ் 90 பேருக்கு சுற்றுச்சூழல் விருதுகளை கௌரவ ஜனாதிபதி அவர்கள் வழங்கினார்.