மும்பை : நடிகர் ஷாருக்கானி மகன் புதிய தொழில் ஒன்றை துவங்கி அதில் கோடி கோடியாக பணத்தை அள்ளி வருகிறார்.
பாலிவுட் பாட்ஷா, கிங் கான் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவருக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல், உலகளவில் ஏராளமான ரசிகர்களை வைத்து இருக்கிறார்.
சினிமா ரசிகர்களின் நாடி துடிப்பை நன்றாக தெரிந்து கொண்டு ஷாருக்கான் அதற்கு ஏற்றார் போல் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
பதான் : ஷாருக்கான் நடிப்பில் அண்மையில் பதான் திரைப்படம் வெளியானது. பான் இந்திய திரைப்படமாக வெளியான இப்படத்தில் ஷாருக்கான் இந்திய ரா பிரிவின் ரகசிய உளவாளியாக நடித்திருந்தார். இப்படம் வெளியாவதற்கு முன்பு காவி நிற நீச்சல் உடை சர்ச்சையை கிளப்பினாலும் வசூலில் பதான் படம் மாஸ் காட்டியது.
D YAVOl X நிறுவனம் : இந்நிலையில் ஷாருக்கானின் மகன் ஆர்யா கான், ஆடை விற்பனை செய்யும் புதிய நிறுவனம் ஒன்றையும் துவங்கி உள்ளார். இதற்காக நடைபெற்ற தொடங்க விழாவில் நடிகை, நடிகர்கள் என பலர் கலந்து கொண்டனர். மிகவும் கோலாகலமாக பார்ட்டி கொண்டாடப்பட்டது. இதையடுத்து, D YAVOl X நிறுவனத்துடன் இணைந்து ஆன்லைனில் விற்பனையைத் துவங்கினார். இதற்கான விளம்பரப் படத்தில் ஆர்யன்கானுடன் நடிகர் ஷாருக்கானும் நடித்திருந்தார்.
அதிகவிலை : D YAVOl X இந்த பிராண்ட் நிறுவனத்தில் ஒரு ஜாக்கெட்டின் விலை ரூ.2 லட்சத்திற்கும் ஒரு டீ சர்ட்டின் விலை ரூ.24,000 க்கும் விற்பனை செய்யப்பட்டது இணையவாசிகளை வாய்பிளக்க வைத்த நிலையில், ஆடை முழுவதும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும் மீண்டும் அதன் விற்பனை விரைவில் துவங்கும் என்றும் ஆர்யன்கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
கோடி கோடியா பணம் இருக்கு : இதைப்பார்த்த நெட்டிசன் ஒரு ஜாக்கெட்டின் விலை இரண்டு லட்சமா என்றும், இது பகல் கொள்ளையாக இருக்கிறதே என்றும், கோடி கோடியாக பணம் இருந்தும், ஷாருக்கானுக்கு இன்னும் பணத்தின் மீதான ஆசை தீரவில்லை போல என கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதிக விலைக்கு ஆடைகள் விற்ற போதும் அது விற்று தீர்ந்தது தான் கொடுமையிலும் கொடுமை.
போதை பொருள் வழக்கில் : ஷாருக்கானின் மகன் ஆர்யா கான் தடைசெய்யப்பட்ட போதைப் பார்ட்டியை சொகுசு கப்பலில் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியது. மகனை ஜாமினில் விடுவிக்க ஷாருக்கான் பெரும் போராட்டத்தையே நடத்தினார். பின்னர், தனது மகன் மீது எந்தவொரு குற்றமும் இல்லை என நீதிமன்றத்தில் நிரூபித்தது குறிப்பிடத்தக்கது.