கையால் தட்டிய 'ஜோலெட் ரொட்டி'.. கர்நாடகாவில் வானதியின் தேர்தல் சீக்ரெட்..!

கர்நாடகா சட்டமன்ற தேர்தலையொட்டி கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ

அம்மாநிலத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அங்குள்ள வீட்டு சமையலறையில் வானதி சீனிவாசன் ஜோலெட் ரொட்டி தயாரித்துள்ளார் அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடகாவில் இந்த ஜோலெட் ரொட்டி மிகவும் பிரபலம் வாய்ந்த உணவு. இரவு நேரங்களில் பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் இந்த ரொட்டியை கைகளால் தட்டி தயாரிக்கப்படும் என்கின்றனர். அந்த சத்தம் கூட இனிமையாக இருக்கும் என அங்கிருந்தவர்கள் சொல்கின்றனர்.

அந்த வகையில் கர்நாடகாவுக்கு சென்ற வானதி சீனிவாசன் இந்த பிரபலமான ரொட்டியை கையால் தட்டி தயாரித்த வீடியோவை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதேபோல சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து வந்தே பாரத் ரயிலில் பயணித்த வானதி சீனிவாசன் சீட்டில் அமர்ந்து சுற்றி விளையாடிய வீடியோ கலகலப்பாக இருந்தது.

பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் என்ற முக்கிய பொறுப்பில் உள்ள வானதி சீனிவாசன் கர்நாடகா தேர்தலுக்கு பங்காற்றி வருகிறார். இதுகுறித்து அண்மையில் இவர் தேசிய ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், கர்நாடகாவில் ஒருபெண் கூட பாஜகவுக்கு வாக்களிக்காமல் இல்லை என்ற நிலை வரவேண்டும். தேசிய பெண்கள் அணி தலைவர் என்ற அடிப்படையில் பெண் வாக்காளர்கள் மீது கவனம் செலுத்துவோம். உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா மற்றும் குஜராத் பெண்களிடையே பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெண்கள் பாஜக மீது காட்டும் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு முடக்குகிறதா? வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு !

பாஜகவுக்கு ஆதரவளிக்காமல் எந்த ஒரு பெண் ஆதரவாளரும் பின் தங்கி விடக்கூடாது என்பதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம் அனைத்து அரசு திட்டங்களிலும், 50 சதவீதத்திற்கும் அதிகமான பயனாளிகள் பெண்கள். அனைத்து பெண் பயனாளிகளுடனும் 1 கோடி செல்ஃபிகளை பதிவேற்றம் செய்து ”நமோ” செயலியில் பதிவேற்றியுள்ளோம். கர்நாடகாவில், மத்திய திட்டத்தை மாநில திட்டங்களுடன் இணைப்போம்,” என்று வானதி கூறினார்.

முன்னதாக கர்நாடக தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 224 தொகுதிகளில் 189 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியள் வெளியானது. அதில், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.விஜேந்திரன் உட்பட 52 புதிய முகங்கள், 8 பெண்கள், 9 மருத்துவர்கள், 5 வழக்கறிஞர்கள், ஒரு ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி, 3 ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் 8 சமூக ஆர்வலர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.