மதுரை மாவட்டத்தில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவர் தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் வில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் துறைப்பாண்டி. இவரது மனைவி சந்திரா தேவி (27). இந்நிலையில் துரைப்பாண்டிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த துறைப்பாண்டிக்கும், சந்திரா தேவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த துறைப்பாண்டி, சந்திராதேவியை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து காயமடைந்த சந்திரா தேவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கீரைத்துறை போலீசார் தப்பி ஓடிய துறைப்பாண்டியை கைது செய்தனர்.