அண்மையில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. வசூலிலும் இந்தப்படம் மாஸ் காட்டி வருகிறது. மல்டி ஸ்டார் படமாக வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ள விக்ரமின் நடிப்பு பலரிடமும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் விக்ரம். படத்தின் கதைக்காக தன்னையே வருத்திக்கொண்டு நடிக்கும் வெகு சில நடிகர்களில் விக்ரம் முக்கியமானவர். கடந்த வருடம் இவரது நடிப்பில் பொன்னியின் முதல் பாகம் மற்றும் கோப்ரா ஆகிய படங்கள் வெளியானது. இந்த இரண்டு படங்களும் வரவேற்பை பெற்று வசூலிலும் மாஸ் காட்டியது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இதனையடுத்து விக்ரம் நடிப்பில் தற்போது ‘பொன்னியின் செல்வன் 2’ படம் வெளியாகியுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே இந்தப்படத்தில் நடித்துள்ளனர். கடந்த வாரம் வெளியான இந்தப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் இடையேயான காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளி வருகிறது. மேலும் 200 கோடி வரை ‘பொன்னியின் செல்வன் 2’ படம் வசூலித்துள்ளது.
இதனிடையில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தங்கலான்’ படத்திலும் விக்ரம் நடித்து வருகிறார். கடந்த வருடம் பூஜையுடன் விக்ரமின் 61 வது படமாக இந்தப்படம் துவங்கியது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிப்பில் பிரம்மாண்டமாக இந்தப்படம் உருவாகி வருகிறது. மேலும், ‘தங்கலான்’ படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
PS 2: அடேங்கப்பா.. வசூலில் தூள் கிளப்பும் ‘பொன்னியின் செல்வன் 2’: இத்தனை கோடியா..!
‘தங்கலான்’ படத்தில் விக்ரமுடன் பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 3டி தொழில்நுட்பத்தில் பீரியட் பிலிமாக இந்தப்படம் உருவாகி வருகிறது. இந்தப்படத்திற்காக நீண்ட தாடி, வித்தியாசமான ஹேர்ஸ்டைல் என வித்தியாசமான லுக்கில் நடித்து வருகிறார் விக்ரம். கேஜிஎப் குறித்த உண்மை சம்பவங்களை கூறும் விதமாக இந்தப்படம் உருவாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்தப்படம் எக்கச்சக்க எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
விவாகரத்து கிடைத்ததை வேறலெவலில் கொண்டாடிய நடிகை: தீயாய் பரவும் போட்டோஸ்.!
இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன் 2’ பட புரமோஷனுக்காக ‘தங்கலான்’ படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தற்போது படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் ‘தங்கலான்’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னை நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ‘தங்கலான்’ படம் இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என இயக்குனர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.