வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: முன்னணி விமான நிறுவனமான கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் கடும் நிதி நெருக்கடி காரணமாக திவால் ஆகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாடியா குழுமத்துக்கு சொந்தமான கோ பர்ஸ்ட் விமானம் நிறுவனம் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் கடும் நிதி பற்றாக்குறை காரணமாக திவால் தீர்மான நடவடிக்கைக்கான நோட்டீசை தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ளது. இதனால், மே.3,4, மற்றும் 5 ஆகிய மூன்று நாட்களுக்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியது, கோ பர்ஸ்ட் நிறுவனம் 59 விமானங்களை இயக்கி வருகிறது. தற்போதைய நிலையில் விமானத்துக்கு தேவையான இன்ஜின்கள் உள்ளிட்டவைகளை அமெரிக்காவின் பிராட் அன்ட் விட்னி என்ற நிறுவனம் சப்ளையை நிறுத்தி வைத்ததால், கோ பர்ஸ்ட் நிறுவனத்தின் 28 விமானங்கள் இயக்கப்படாமல் உள்ளன. இதையடுத்து கடும் நிதி நெருக்கடியை சந்திக்க தொடங்கியது.
இந்நிலையில் தான் வாடியா குழுமம் டில்லியில் உள்ள தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் திவால் தீர்மானத்துக்கான நோட்டீசை தாக்கல் செய்துள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement