இளையராஜாவின் அண்ணன் மகன் திடீர் மரணம்: சோகத்தில் திரையுலகினர்.!

தமிழ் சினிமா ரசிகர்களால் இசைஞானி என அன்போடு அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் இளையராஜா. இவரின் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன். இவரும் திரையுலகில் பயணித்து வந்தார். இந்நிலையில் இவரின் மகன் பாவலர் சிவராமன் உடல்நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
இளையராஜாவின் மூத்த சகோதரரான பாவலர் வரதராஜன் நாடக எழுத்தாளர், இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இளையராஜாவின் ஆரம்பக்கால வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய இவர் கடந்த 1973 ஆம் ஆண்டே மரணமடைந்தார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

பாவலர் வரதராஜன் மகன் பாவலர் சிவராமன் இளையராஜாவின் இசைக்குழுவில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். சில படங்களுக்கும் இசையமைத்துள்ளார். புதுச்சேரியில் வசித்து வந்த சிவராமன் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்று இன்று காலமாகியுள்ளார்.

Sarathkumar: பாயாசம் சாப்பிடுங்க பிரெண்ட்ஸ்.. ‘சூரிய வம்சம் 2’ அப்டேட் கொடுத்த சரத்குமார்.!

இவரின் மறைவு தொடர்பாக இசையமைப்பாளர் தீனா தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பதிவில், இசைஞானியின் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜனின் மகன் கிதார் இசைக் கலைஞர் சிவராமன் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.

‘பொன்னியின் செல்வன் 2’ பிரம்மாண்ட வெற்றி: தங்கலானில் மாஸ் காட்ட ரெடியாகும் விக்ரம்.!

இசைஞானி இளையராஜா வீட்டில் நிகழ்ந்துள்ள இந்த சோகம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பாவலர் சிவராமன் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.