உயிர்களுக்கு ஆபத்து; கைத்துப்பாக்கி வேண்டும்; விஏஓ சங்கத்தினர் கோரிக்கை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளனர். நேர்மையான அதிகாரிகள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தற்காப்பு பயிற்சி வழங்க வேண்டும் என்றும் தேவைப்படும் பட்சத்தில், கைத்துப்பாக்கி வழங்கவும் பரீசிலனை செய்ய கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டிபடுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. அரசு அதிகாரியை அலுவலகம் புகுந்து வெட்டிக்கொலை செய்யும் அளவுக்கு கொலைகார கும்பலுக்கு வந்த துணிவால் சாமானிய மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

அந்த அதிர்ச்சி குறைவதற்குள் திருக்கழுகுன்றத்தை சேர்ந்த சர்புதீன் (40) என்பவரை பட்டப்பகலில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்து தப்பியது. இவர் திருக்கழுக்குன்றத்தில் உள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததாக கூறப்படுகிறது.

கிராம நிர்வாக அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை!!

இவ்வாறு சட்டவிரோத செயல்களை தட்டி கேட்கும் சாமானியர்கள் முதல் அரசு அதிகாரிகள் வரை வெட்டிக்கொலை செய்யப்படும் தமிழகத்தின் மோசமான சூழலில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் முக்கிய கோரிக்கையை அரசிடம் வைத்துள்ளது.

அதில், ”தூத்துக்குடி முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் சேலம் மாவட்டம் மானாத்தாள் கிராம நிர்வாக அலுவலகரை வெட்டி கொலை செய்யும் நோக்கில் அவரை விரட்டிய சம்பவங்களால் அனைத்து ஊழியர்களும் அச்சத்தோடு பணி செய்து வருகின்றனர்.

அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும், வருவாய் துறை ஊழியர்களுக்கும் தற்காப்பு பயிற்சி வழங்கவும், தேவைப்படும் பட்சத்தில் கைத்துப்பாக்கி வழங்கவும் அரசு உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும்” என்று கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

இந்த பதட்டமான சூழலில் இந்த கோரிக்கையை தமிழக அரசு பரிசீலினை செய்தால் நேர்மையான அதிகாரிகள் பாதுகாப்பாக தங்கள்து பணிகளை செய்வார்கள் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.