யுஏஇ அணியை வீழ்த்தி ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றது நேபாளம்…!

கீர்த்திபூர்,

2023ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை தொடருக்கு முன்னதாக பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த முறை ஆசிய கோப்பை தொடர் 50 ஓவர் முறையில் நடைபெற உள்ளது. 50 ஓவர் உலகக்கோப்பை இந்தியாவில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. அதற்கு முன்னோட்டமாக இந்த தொடர் நடைபெறுகிறது.

இந்த தொடருக்கு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன. இந்நிலையில் 6வது அணியை தேர்வு செய்ய ஏசிசி ஆண்கள் பிரீமியர் கோப்பை 2023 நடத்தப்பட்டது. இதில் 10 அணிகள் கலந்து கொண்டன. இதில் இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணி ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெறும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் நேபாளம்-யுஏஇ அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய யுஏஇ அணி 33.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்னுக்கு சுருண்டது. இதையடுத்து களம் இறங்கிய நேபாள அணி 30.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 118 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் நேபாள அணி ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதால் இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா? அல்லது இந்திய அணியின் ஆட்டங்கள் பொதுவான இடத்தில் நடத்தப்படுமா என தெரியவில்லை.இந்திய அணி பாகிஸ்தான் செல்லவில்லை எனில் இந்திய அணியின் ஆட்டங்கள் இலங்கை அல்லது யுஏஇல் நடத்தப்படலாம் என தெரிகிறது.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.