சென்னை: டிக் டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரே வாரத்தில் ஓஹோன்னு பிரபலமானார். அதன் பின்னர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் ரசிகர்களை சிரிக்க வைத்தார்.
அஜித்தின் துணிவு, சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட், ஷிவானி நாராயணின் பம்பர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் ஜிபி முத்து.
டபுள் மீனிங்கில் பேசி டிக் டாக் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த ஜிபி முத்து தற்போது வெள்ளைக்கார பெண்ணுடன் எடுத்த செல்ஃபி போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
ஜெட் வேகத்தில் வளரும் ஜிபி முத்து: கெட்ட வார்த்தையில் பேசினாலும் வெள்ளந்தியான வட்டார வழக்குப் பேச்சு மற்றும் அவரது செய்கை காரணமாக டிக் டாக்கில் திடீரென பிரபலமாகி விட்டார் ஜிபி முத்து.
பொட்டல் காட்டில் உட்கார்ந்துக் கொண்டு லெட்டர் படிக்கிறேன் என அவர் செய்யும் அலப்பறையை பார்த்து பிக் பாஸ் வீட்டிலேயே போட்டியாளராக பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அங்கே ஆதாம்னா யாரு? என கமலுக்கே பல்பு கொடுத்து ஓவர் நைட்டில் ரசிகர்களின் ஆர்மியை அள்ளினார் ஜிபி முத்து.
குக் வித் கோமாளியிலும் ரகளை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீக்கிரமாகவே வெளியேறிய ஜிபி முத்து அடுத்து விஜய் டிவியின் குக் வித் கோமாளியின் லேட்டஸ்ட் சீசனிலும் கலந்து கொண்டு ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார்.
ரியாலிட்டி ஷோக்களில் மட்டுமின்றி சினிமாவிலும் கிடைக்கும் வாய்ப்புகளை கைப்பற்றி தூள் கிளப்பி வருகிறார் ஜிபி முத்து.
வெள்ளைக்கார பெண்ணுடன் ஜிபி முத்து: இந்நிலையில், தற்போது வெள்ளைக்கார பெண் ஆண்ட்ரியானாவுடன் ஜிபி முத்து எடுத்துக் கொண்ட செல்ஃபி போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார். குக் வித் கோமாளியில் கலக்கிக் கொண்டு இருக்கும் பிரெஞ்சு தமிழ் பெண்ணான ஆண்டிர்யானாவுடன் தான் ஜிபி முத்து ஜோடி போட்டு சுற்றி வருகிறாராம்.
ஜிபி முத்துவை மிஞ்சும் அளவுக்கு ஆண்ட்ரியானா பாவாடை தாவணியில் படு க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார். ஆண்ட்ரியானா என அந்த பெண்ணின் பெயரை மட்டும் ஜிபி முத்து கேப்ஷனாக கொடுக்க கமெண்ட் பக்கம் களைகட்டி வருகிறது.
எப்போ திருமணம்: அந்த வெள்ளைக்கார ஆண்ட்ரியா கூட எப்போண்ணே திருமணம் செய்யப் போறீங்க என்றும் எந்த புதருக்குள்ள இருந்து செல்ஃபி எடுத்தீங்க என்றும் விவகாரமாக ஏகப்பட்ட கமெண்ட்டுகளை ஜிபி முத்துவின் ரசிகர்கள் போட்டுத் தாக்கி வருகின்றனர்.
மேலும், ஏகப்பட்ட டபுள் மீனிங் கமெண்ட்டுகளும், அண்ணனுக்கு அடுத்த படத்தில் ஹாலிவுட் நடிகை ஜோடி என்றும் கலாய்த்து வருகின்றனர்.