கடவுள் கூறியதால் ஆசிரியை வேலையை விடுத்து ஆபாச நடிகையானேன்! பகீர் கிளப்பிய பெண்


கனவில் கடவுள் கூறியதால் ஆபாச நடிகையாக மாறியதாக முன்னாள் அமெரிக்க ஆசிரியை கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆபாச நடிகை

அமெரிக்காவில் பிரபல ஆபாச நடிகையாக அறியப்படுபவர் கர்ட்னி டில்லியா (35). இவர் கூறியுள்ள விடயம் தற்போது இணையத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அதாவது, கர்ட்னி டில்லியா இதற்கு முன்பு ஆசிரியையாக பணியாற்றியுள்ளார். ஆனால் ஆபாச நடிகையாக மாறுவதற்கு கடவுள் தான் காரணம் என பகீர் கிளப்பியுள்ளார்.

கர்ட்னி டில்லியா/Courtney Tillia Image: Playback/Instagram

கடவுள் கூறியதாக பகீர் கிளப்பிய நடிகை

இதுதொடர்பாக அவர் கூறுகையில், நான் ஆபாச நடிகையாக வேண்டும் என்பது கடவுளின் விருப்பம். அது ஒரு கனவு. நான் அப்போது ஆசிரியையாக இருந்தேன்.

ஆனால் கடவுள் வந்து என்னை ஆபாச நட்சத்திரமாக மாறுமாறு கூறினார். இன்று அவர் விருப்பப்படி இந்தத் தொழிலில் ஈடுபட்டு முழு மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

நான் கடவுளுடன் தொடர்பில் இருக்கிறேன். கடவுள் உலகளாவியர், எனவே கடவுளுடன் இணைவதற்கும், கடவுளின் செய்திகளைப் பெறுவதற்கும், அவரை புரிந்துகொள்வதற்கும் எந்த குறிப்பிட்ட மத அமைப்பும் தேவையில்லை’ என தெரிவித்துள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த கர்ட்னி டில்லியா மூன்று ஆபாச இணையதளங்களை நடத்தி வருகிறார். அவருக்கு 25,000க்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.         

கர்ட்னி டில்லியா/Courtney Tillia Image: Instagram



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.