உக்ரைன் போர்க்களத்தில் கடந்த 5 மாதங்களில் ரஷ்ய வீரர்கள் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
உக்ரைனின் பாக்முத் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் முதல் தீவிர சண்டையிட்டு வரும் ரஷ்ய ராணுவம், அதற்காக பெரிய விலையை கொடுத்துள்ளதாகவும், ரஷியாவின் போர் வியூகங்கள் தோல்வியடைந்துவிட்டதாகவும் அமெரிக்கா விமர்சித்துள்ளது.
ரஷ்ய வீரர்கள் மேலும் 80 ஆயிரம் பேர் படுகாயமடைந்ததாகவும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு பிரிவின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். தங்கள் உளவுத்துறையின் மூலம் இந்த தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.