ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 நடவடிக்கையாகத் தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 72 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 66 கிலோ கஞ்சா மற்றும் 15 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 2 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து போலீசார் தரப்பில் வெளியான செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி கஞ்சா வேட்டை 4.0 அதிரடி நடவடிக்கை தமிழகம் முழுவதும் 30.04.2023 முதல் நடைபெற்று வருகிறது.
கடந்த மூன்று நாட்களில் தமிழகம் முழுவதும் 72 கஞ்சா வியாபரிகள் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 66 கிலோ கஞ்சா மற்றும் 15 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இரண்டு வங்கி கணக்குகள் முடுக்கப்பட்டுள்ளன.
அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணையர்களும் கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களின் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.