லக்னோ,
நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 43வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய லக்னோ 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் லக்னோவை 18 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றிபெற்றது
இந்த போட்டியில் பெங்களூரு வெற்றிபெற்ற நிலையில் போட்டியின் போதும், போட்டிக்கு பின்னும் பரபரப்பான சூழ்நிலையே நிலவியது. லக்னோ பேட்டிங் செய்தபோது 17வது ஓவரில் லக்னோ வீரர் நவீன் உல் ஹக் மற்றும் பெங்களூரு வீரர் கோலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோலியும், நவீனும் மைதானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் நடுவர் பிரச்சினையை சமரசம் செய்துவைத்தார்.பின்னர், பெங்களூரு வெற்றிபெற்ற பின் இரு அணி வீரர்களும் சந்தித்தபோது லக்னோ வீரர் நவீன் பெங்களூரு வீரர் கோலியும் மீண்டும் மோதிக்கொண்டனர்.
இந்த நிலையில் நவீன் உல் ஹக் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார்.
நவீன் வெளியிட்ட பதிவில் ,,
“உங்களுக்கு தகுதியானது உங்களுக்கு கிடைத்தே தீரும்., அது தான் வழக்கம். என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
முன்னதாக வாக்குவாதத்தில் விராட் கோலி மற்றும் லக்னோ அணியின் ஆலோசகர் கம்பீர் ஆகியோர் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது