புதுடெல்லி: பயனாளிகள் தங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை சரிபார்க்க இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) குடியிருப்பாளர்கள் அனுமதி அளித்துள்ளது.
சில நேரங்களில் பயனர்கள் தங்களுடைய ஆதார் எந்த மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மக்களுக்குத் தெரியவில்லை என்பது யுஐடிஏஐ கவனத்திற்கு வந்தது. எனவே ஆதாருடன் தொடர்புடைய ஒரு முறை கடவுச் சொற்கள் (ஓடிபி) வேறு ஏதேனும் எண்ணுக்குப் போய்விடுமோ என மக்கள் கவலைப்பட்டனர். இப்போது, இந்த வசதியின் மூலம், மக்கள் இதை மிக எளிதாகச் சரிபார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுஐடிஏஐ-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://myaadhaar.uidai.gov.in/) அல்லது mAadhaar செயலியில் ‘மின்னஞ்சல்/மொபைல் எண்ணைச் சரிபார்க்கவும்’ என்ற அம்சத்தின் கீழ் இந்த வசதியைப் பயனர்கள் பெறலாம். குறிப்பிட்ட மொபைல் எண் அவர்களது ஆதாருடன் இணைக்கப்படாத பட்சத்தில் அதனைத் தெரிவிப்பதோடு, அவர்கள் விரும்பினால், மொபைல் எண்ணைப் புதுப்பிக்கத் தேவையான நடவடிக்கைகளைகளையும் அதில் அறிந்து கொள்ளலாம்.
ஆதார் பதிவு செய்யும்போது கொடுத்த மொபைல் எண் நினைவில் இல்லை என்றால், mAadhaar தளம் மற்றும் mAadhaar செயலியில், பயனர்கள் ஏற்கனவே கொடுத்த மொபைல் எண்ணின் கடைசி 3 இலக்கங்களைப் பார்க்க முடியும்.
மின்னஞ்சல்/மொபைல் எண்ணை ஆதாருடன் இணைக்கவோ, புதுப்பிக்கவோ விரும்பினால், மக்கள் அருகில் உள்ள ஆதார் மையத்திற்குச் செல்லலாம்.