சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் தங்கலான் படம் தயாராகி வருகிறது.
அந்த படத்தில் நடிக்கும் ஒவ்வொரு நடிகரும் தங்கள் உடம்பை வருத்தி கஷ்டப்பட்டு நடித்து வருகின்றனர் என்பது சமீபத்தில் சியான் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான மேக்கிங் வீடியோவை பார்த்தாலே புரிந்து விடும்.
தங்கலான் படத்துக்காக ஓடாய் தேய்ந்துள்ள நடிகை மாளவிகா மோகனன் தனது ஃபிளாட்டான இடுப்பை மட்டும் காட்டி எடுத்த வீடியோவை ஷேர் செய்துள்ளார்.
தங்கலான் படத்தில் மாஸ்டர் ஹீரோயின்: ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு வந்த மலையாள நடிகை மாளவிகா மோகனன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தனுஷின் மாறன் படத்தில் நடித்த மாளவிகா மோகனனுக்கு அந்த படம் சரியாக போகாத நிலையில், பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தில் தரமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
உடல் மெலிந்து ஓடாய் தேய்ந்து விட்டார்: ஏற்கனவே பிகினி உடைகளை அணியும் அளவுக்கு ஃபிட்டாகத் தான் தனது தேகத்தை வைத்திருந்தார் மாளவிகா மோகனன். ஆனால், தங்கலான் படத்தில் நடிக்க மேலும், தனது உடல் எடையை குறைத்து ஃபிட்டாக மாறி வருகிறார்.
தொடர்ந்து ஜிம்மிலேயே இருந்து வொர்க்கவுட் செய்யும் போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வரும் மாளவிகா மோகனன் லேட்டஸ்ட்டாக ஒரு போஸ்ட்டையும் போட்டு தங்கலான் அப்டேட்டையும் கொடுத்துள்ளார்.
வெறும் இடுப்பை மட்டும் காட்டி: தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது இடுப்பை மட்டும் காட்டியபடி எடுத்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.
குஷி படத்தில் இடுப்பை பார்த்ததற்கு எல்லாம் ஒரு பெரிய பஞ்சாயத்தே நடந்தது. ஆனால், இப்போ என்னன்னா? இடுப்பை மட்டுமே காட்டி நடிகைகள் வீடியோ போடுறாங்களே என கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
தங்கலான் அப்டேட்: மேலும், அந்த போஸ்ட்டில் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு இன்னும் 2 நாட்களில் தொடங்க உள்ள நிலையில், கடுமையாக அந்த படத்துக்காக வொர்க்கவுட் செய்து வருவதாக கூறி உள்ளார்.
அவரது போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் தண்ணியையாவது குடிங்க தங்கமே உடம்பை பத்திரமா பார்த்துக்கோங்க மாலு என அக்கறையுடன் பல கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.