ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
Sarathkumar about PS2, career and politics:பொன்னியின் செல்வன் 2 விளம்பர நிகழ்ச்சிகள் பற்றிய உண்மையை சொல்லியிருக்கிறார் பெரிய பழுவேட்டரையர் சரத்குமார்.
பொன்னியின் செல்வன் 2மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார் உள்ளிட்டோர் நடித்த பொன்னியின் செல்வன் 2 படம் ஏப்ரல் 28ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. படம் ரிலீஸான நான்கு நாட்களில் ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளது. முன்னதாக நடந்த விளம்பர நிகழ்ச்சிகளில் கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டார்கள். சரத்குமாரை அழைக்காததால் அவர் வரவில்லை என்று கூறப்பட்டது.
Ponniyin Selvan 2: பொன்னியின் செல்வன் 2 எப்படி?: ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக்கின் அசத்தல் விமர்சனம்
ரஜினிநான் Rajini Sir Style-ல தான் நடிக்கிறேன் – Sivakarthikeyan fantastic speech
சரத்குமார்AR Rahman: ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை நிறுத்திய போலீஸ்: ஏன்னு பாருங்கசுப்ரீம் ஸ்டார் சரத்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் பொன்னியின் செல்வன் 2 விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதது குறித்து விளக்கம் அளித்தார். சரத்குமார் கூறியதாவது, நான் இப்போது பேசுவது பெரிய பழுவேட்டரையர் பேசுவது போல் உள்ளது என்கிறார்கள், மகிழ்ச்சி. நான் எப்போதும் நல்ல தமிழ் தான் பேசி வருகிறேன். கலை உலகத்தில் இருந்து கொஞ்ச காலம் ஒதுங்கி இருந்தேன், ஆனால் இப்போது தொடர்ந்து படங்கள் நடிக்க ஆரம்பித்துள்ளேன். கலை தான் என் தொழில் என்றார்.
முடியவில்லைசரத்குமார் மேலும் கூறியதாவது, பத்திரிகை நண்பர்கள் எப்போதும் என்னிடம் உரிமையுடன் எதையும் பரிமாறி வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி. இப்போதைய தலைமுறைக்கும் நம்மை தெரிய வேண்டுமென நினைக்கிறேன். பொன்னியின் செல்வன் பட ப்ரொமோஷனில் நான் கலந்துகொள்ளவில்லை என பலர் கேள்வி எழுப்பியிருந்தார்கள். என்னை அழைத்திருந்தார்கள் ஆனால் நான் சென்னையில் இல்லாததனால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்றார்.
நன்றிமணிரத்னம் மிகச்சிறந்த பாத்திரம் தந்திருந்தார். இப்போது படம் எல்லோரிடத்திலும் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி. பொன்னியின் செல்வன் வாய்ப்பு தந்ததற்கு மணிரத்னத்திற்கும், லைகா ப்ரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரனுக்கும் நன்றி. இன்றைய தலைமுறைக்கு என்னை எடுத்துச் சென்ற வாரிசு படத்திற்காக வம்சி மற்றும் விஜய்க்கு நன்றி. ருத்ரன் வில்லன் பாத்திரம் என்றபோது தயங்கினேன் ஆனால் இப்போதைய ரசிகர்கள் வில்லனாக நடிப்பவர்களை அதே போன்று பார்ப்பதில்லை, அந்த கதாப்பாத்திரத்தை எப்படி செய்துள்ளனர் என்றே பார்க்கிறார்கள். அதனால் தைரியமாக நடித்தேன். அடி வாங்கும் சாதாரண வில்லனாக நடிக்க மாட்டேன் என்றார் சரத்குமார்.
மாஸ் அறிவிப்புநான் நாயகனாக நடித்த காலத்தை விட இப்போது அதிகப்படம் நடித்து வருகிறேன். வெப் சீரிஸ், படம் என பம்பரமாக சுழன்று வருகிறேன். தொடர்ந்து சினிமாவில் என் பயணம் தொடரும். அரசியல் பற்றி நிறைய கேள்விகள் வருகிறது, விரைவில் அதற்காக தனியாக பத்திரிக்கை நண்பர்களைச் சந்திப்பேன். 2026-ல் ஒரு மாஸான அறிவிப்பு வரும். எப்போதும் உங்கள் ஆதரவு எனக்கு இருந்துள்ளது. அந்த ஆதரவை தொடர்ந்து தாருங்கள் நன்றி என தெரிவித்தார் சரத்குமார்.