பிரியாணியில் நெலிந்த கரப்பான் பூச்சி – ஷாக்கான வாடிக்கையாளர்


ஐதராபாத்தில் உள்ள உணவகத்தில் வாடிக்கையாளர் வாங்கிய பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரியாணியில் நெலிந்த கரப்பான் பூச்சி

ஐதராபாத், அமீர்பேட்டை, கேப்டன் குக் என்ற உணவகம் உள்ளது. இந்த உணவகத்தில் அருண் என்பவர் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். உணவு ஆர்டர் செய்து தன் பணியிடத்தில் சாப்பிடுவதற்காக உணவு பொட்டலத்தை திறந்துள்ளார்.

அப்போது உணவில் கரப்பான் பூச்சி ஊர்ந்து சென்றதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே, அந்த உணவகத்தைத் தொடர்புகொண்டு இது தொடர்பாக புகாரளித்தார்.

cockroach-in-biryani-hyderabad

ஆனால், அந்த உணவகத்தின் மேலாளர் மன்னிப்பு கேட்டார்.

இதனையடுத்து, அருண் மாவட்ட மன்றத்தில் இது குறித்து புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அந்த ​​உணவக நிர்வாகிகள் குற்றச்சாட்டை மறுத்ததோடு, உணவு புதியதாகவும், சூடாகவும் இருப்பதாகவும், அந்த வெப்பநிலையில் பூச்சியால் உயிர்வாழ முடியாது என்றும் வாதிட்டனர்.

இருப்பினும், உணவக உரிமையாளர்கள் தூய்மை மற்றும் சுகாதாரத் தரங்களைப் பராமரிக்கத் தவறியதாக ஆணையம் கண்டறிந்தது.

உணவிலிருந்து கரப்பான் பூச்சி ஊர்ந்து செல்லும் வீடியோவை அருண் அதிகாரிகளிடம் வழங்கினார்.

இதனையடுத்து, கேப்டன் குக் உணவகம் அருணுக்கு இழப்பீடாக ரூ.20 ஆயிரமும், விசாரணையின் போது ஏற்பட்ட செலவுக்கு கூடுதலாக ரூ.10 ஆயிரமும் வழங்க ஆணையம் பிறப்பித்தது. இந்த அபராதத் தொகையை 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. 

cockroach-in-biryani-hyderabad



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.